ஹைதராபாத்தில் உள்ள என்டிஆர் மார்க்கில் 125 அடி உயரத்தில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கருக்கு நாட்டிலேயே உயரமான வெண்கல சிலை ஏப்.14ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு திறக்கப்பட உள்ளது.
450 கிலோ எடை கொண்ட கிரேன் இந்தச் சிலையை நிறுவுகிறது. சிலையில் இடது கையில் இந்தியா என்று எழுதப்பட்ட புத்தகத்தின் பகுதிகளும், வலது கையில் இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகமும் காணப்படும்.
இந்த சிலை மாநில முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவ்வின் விருப்பத்திற்குரிய திட்டமாகும். சிலை அமையயுள்ள இடத்தில் நாடாளுமன்ற வடிவத்தில் கட்டடம், 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம், நூலகம் மற்றும் காட்சிக் கூடமும் இடம் பெற்றுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ஹுசைன்சாகர் ஏரி மற்றும் டாக்டர் அம்பேத்கரின் பெயரிடப்பட்டுள்ள புதிய தெலுங்கானா மாநில செயலகத்தின் கரையை ஒட்டி 11.4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் ரூ.146 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கேபிசி ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் நிறுவனம் மற்றும் ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் இதேபோன்ற மற்றொரு 125 அடி உயர சிலையை அமைக்கவுள்ளது” என்றார்.
ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையின் தோற்றம் எளிமையானது மற்றும் மிகவும் நினைவில் உள்ளது என்றாலும், வேலைப்பாடு மற்றும் விவரங்கள் அதை தனித்துவமாக்குகிறது என்று தலைமை சிற்பி அனில் ராம் சுதார் கூறுகிறார்.
இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தொலைபேசியில் பேசிய அவர், உயரத்தில் உள்ள விவரங்களை மக்கள் கவனிக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சிற்பம் உருவாக்கப்படவில்லை.” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/