17-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு நாளை (திங்கட்கிழமை) இந்தூரில் நடைபெறுகிறது. இந்தியாவின் சுதந்திரத்தில் புலம்பெயர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதற்காக ஒரு தற்காலிக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
70 நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட புலம்பெயர் உறுப்பினர்கள் இந்தூரில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நேரடியாக நடைபெறுகிறது.
'இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புலம்பெயர்ந்தோர் பங்களிப்பு' (Contribution of Diaspora in Indian Freedom Struggle) என்ற தலைப்பில், 10,000 சதுர அடியில் பரந்து விரிந்த தொழில்நுட்பக் கண்காட்சி, இடத்தின் மையப்பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி அனைவரிடத்திலும் "தேசியம் மற்றும் தனிநபர்கள் மத்தியில் ஒருமைப்பாடு" என்ற உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, முதல் பிரவாசி 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னாப்பிரிக்காவில் வசித்த வந்த அவர், ஜனவரி 9, 1915 இல் பம்பாய்க்கு வந்தவர். இது 50 நாடுகளை உள்ளடக்கிய சுதந்திரப் போராட்டத்தில் 150 இன இந்தியர்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது. காந்தி இந்தியாவிற்கு வந்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படும் என 2003-ம் ஆண்டு மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டது.
மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பிரபலமான வீரர்கள் உள்பட சுதந்திரப் போராட்டத்தில் அதிகம் அறியப்படாத ஹீரோக்களும் இந்த அருங்காட்சியகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளளது. அவர்கள் பெரும்பாலான நாட்கள் இந்தியாவில் வசிக்கவில்லை என்றாலும், அவர்களின் தாய்நாட்டிற்கான பங்களிப்பை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.
1905-இல் இந்தியா ஹவுஸ் நிறுவிய குஜராத்தைச் சேர்ந்த ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா குறித்தும் இந்த அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள இந்திய மாணவர்களிடையே தீவிர தேசியவாதம் பற்றி பேசுவதற்கான ஒரு இடமாக இந்தியா ஹவுஸ் உருவானது.
கண்காட்சியின் வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் ஆகியவை டெல்லியைச் சேர்ந்த டேக்பின் என்று நிறுவனம் செய்தது. இவர்கள் அரசாங்கத்தின் முந்தைய திட்டங்களான நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திட்டம் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்துள்ளனர்.
டேக்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சவுரவ் பாய்க், தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "கண்காட்சியில் ஹாலோகிராம் டெக்லானஜி, விர்ச்சுவல் ரியாலிட்டி, லெவிடேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற
தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3 மாதங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று கூறினார்.
முதல் இரண்டு மாதங்கள் ஆராய்ச்சி மற்றும் பொருட்கள் சேகரிப்பு செய்யப்பட்டது. 1 மாதத்தில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு விட்டது. வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருந்து படங்கள், பெயர்கள் பெற்றவுடன் இது செயல் வடிவம் பெறப்பட்டது. இந்தியா தேசிய ஆவணக் காப்பகம், நேரு நினைவு அருங்காட்சியகம் ஆகியவற்றிலிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியம் ப்ரில்லியண்ட் கன்வென்ஷன் சென்டர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை பல பிரிவுகளாக பிரித்து கண்காட்சி அமைப்பில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் காந்தி, விவேகானந்தர் மற்றும் தாதாபாய் நௌரோஜி போன்ற ஆளுமைகளின் பங்களிப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளது. 1892-இல் இவர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு சேர்ந்தெடுக்கப்பட்ட போது நடந்தவைகள் குறித்து தகவல் உள்ளன. இங்கு காந்தி சிலை ஹாலோகிராம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1931 இல் அவரது புகழ்பெற்ற பேச்சு ஒன்று மீண்டும் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.
அனைவரும் விருப்பத்தின் பேரில் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என்று கண்காட்சி ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் போது, வாழ்வாதாரம் அல்லது துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக பல இந்தியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் பலர் மொரிஷியஸ், பிஜி, சுரினாம் மற்றும் கயானா போன்ற நாடுகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக அனுப்பப்பட்டனர். இந்த மாநாட்டில் கயானா மற்றும் சுரினாம் அதிபர்கள் முறையே தலைமை விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் உதவிய பிகாஜி காமாவைப் பற்றிய ஒரு சிறப்புப் பகுதியும் இதில் உள்ளது. அதே சமயம் கண்காட்சியின் ஒரு பகுதி போஸ் மற்றும் ஆசாத் ஹிந்த் ஃபவுஜுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் நிகழ்வின் போது, ‘சுரக்ஷித் ஜாயென், பிரஷிக்ஷித் ஜாயென்’ என்ற நினைவு அஞ்சல் முத்திரை வெளியிடப்பட உள்ளது. கண்காட்சி இறுதி நாளில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2023ஆம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதுகளை வழங்குகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.