Kumbh crowd management : திங்கள் கிழமை அன்று தங்களின் ஸ்நானத்தை முடித்துவிட்டு ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை ஒரு இளம் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் செய்துவருகிறார். பக்தர்களுக்கு தேவையான வழிகளை காட்டிய பிறகு, இது கொரோனா காலம் என்பதால் அனைவரும் கட்டாயம் முக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்துகிறார்.
தங்களின் 20களில் காணப்படும் அஷீஷ் சௌத்ரி மற்றும் ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தருண் ஷர்மா ஏப்ரல் 7ம் தேதியில் இருந்து இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையில் இவ்வாறு கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்ட மத்திய பாதுகாப்பு பிரிவினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
சௌத்ரி மற்றும் ஷர்மா ஆகியோர் உத்திரகாண்ட் காவல்துறையினரால் இந்த ஆண்டு கும்பமேளா விழாவை நிர்வாகிக்க உருவாக்கப்பட்ட 1553 சிறப்பு காவல்துறை அதிகாரிகள் ஆவார்கள். 1053 பேர் களத்தில் இருக்க மீதம் இருக்கும் 500 பேர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலை சிறப்பாக கையாளுகிறார்கள் என்று கூறிய கும்பமேளா டி.எஸ்.பி. பிரேந்திர பிரசாத் தப்ரால், முந்தைய காலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கும்பமேளாவில் பணியாற்றி உள்ளார்கள். ஆனால் இம்முறை அவர்களுக்கு சிறப்பு காவல்துறை அதிகாரிகள் அங்கீகாரமும் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் மட்டும் இல்லாமல் காங்கிரஸ் சேவதளம் போன்ற அமைப்புகளுக்கும் இம்முறைய சிறப்பு காவல் அலுவலர்கள் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். உத்திரகாண்ட் ஆர்.எஸ்.எஸ். பிரந்த் ஷாரிரிக் பிரமுகர் சுனில், கும்பமேளா ஐ.ஜி. சஞ்சய் குன்ஜியல் தான் இந்த ஏற்பாட்டை செய்தார் என்றும், மார்ச் மாதம் ஆர்.எஸ்.எஸை தொடர்பு கொண்டு கும்பமேளாவை நடத்த தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு தேவை என்று கூறியாதாக கூறினார்.
அனைத்து மாவட்ட ஆர்.எஸ்.எஸ் பிரிவுகளுக்கும் 18 வயது முதல் 50 வயதிற்குள் உள்ள, கும்பமேளாவில் பணியாற்ற விருப்பமுள்ள ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் தேவை என்று கடிதம் எழுதியுள்ளார் ஐ.ஜி. மேலும் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் இரண்டு கூடுதல் எஸ்.பிக்கள் அவர்களுக்கு இது தொடர்பாக வகுப்புகள் எடுத்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து 1500க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு காவலர்களாக பணியாற்றி வருகின்றனர் என்று சுனில் கூறியுள்ளார்.
சிறப்பு காவல்துறை அதிகாரிகளாக பணியாற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. இது சமூக சேவை என்றும் அவர் கூறினார். ஹரித்வார் நகர் பகுதி, படித்துறைகள், ரயில் நிலையங்கள் மற்றும் ரிஷிகேஷ் எல்லை, தெஹ்ரி, பௌரி, உ.பி. எல்லைஇயிலும் அவர்கள் பணியாற்றுகிறனர்.
தேவ்பூரா சௌக்கில் பணியாற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டரான ஜித்தின் வேடிக்கு பக்தர்களை அமைதியாக வழிநடத்தும் பணி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் கூட அடிக்கடி கோபம் அடைந்து பேசுவதுண்டு. ஆனால் நாங்கள் பக்தர்களை அமைதியாக வழிநடத்துகிறோம் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.