Advertisment

சிவாஜி சிலை உடைந்து விழுந்த விவகாரம்; மன்னிப்புக் கேட்டார் மோடி

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 35 அடி சிவாஜி சிலை ஆகஸ்ட் 26 ஆம் தேதி இடிந்து விழுந்தது; இதற்காக மகாராஷ்டிரா கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டார் மோடி

author-image
WebDesk
New Update
modi shivaji statue

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததற்கு மன்னிப்புக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மராட்டியப் பேரரசர் சிவாஜி எனக்கும் எனது சகாக்களுக்கும் வெறும் ராஜா மட்டுமல்ல, என்று பால்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றும்போது கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: In Maharashtra, PM Modi apologises for collapse of Chhatrapati Shivaji statue

“எனக்கும், எனது சகாக்களுக்கும், அனைவருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வெறும் அரசர் மட்டுமல்ல. அவர் மிகவும் மதிக்கப்படுகிறார், வணங்கப்படுகிறார். எங்களைப் பொறுத்தவரை, அவர் எங்கள் வணக்கத்திற்குரிய தெய்வம்" என்று மோடி கூறினார். “சத்ரபதி சிவாஜி மகாராஜை தங்கள் வணக்கக் கடவுளாக வணங்கும் அனைவரிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன்,” என்று மோடி கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினத்தன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 35 அடி சிவாஜி சிலை ஆகஸ்ட் 26ஆம் தேதி இடிந்து விழுந்தது, மாநில அரசை முகம் சுழிக்க வைத்தது.

“எனது கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டது. 2013ல், எனது கட்சி என்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியபோது, நான் முதலில் செய்த காரியம் ராய்காட் கோட்டைக்கு சென்றதுதான். நான் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலைக்கு முன்னால் வணங்கி ஆசிர்வாதம் வாங்கினேன்,” என்று 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான வத்வான் துறைமுகத் திட்டத்தைத் தொடங்கி வைத்து பால்கரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் சிவாஜி சிலை உடைந்து விழுந்துள்ளதால் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர். முதலில், கடற்கரையோரம் வீசிய பலத்த காற்றினால் சிலை இடிந்து விழுந்ததாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்தார். இதற்கிடையில், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், இந்த சிலை கடற்படையால் கட்டப்பட்டது, மாநில அரசு அல்ல என்று கூறினார்.

உயர்மட்டத் தலைவர்களின் ஆரம்பப் பதில் பா.ஜ.க.,வின் மத்தியத் தலைமையுடன் ஒத்துப் போகாத நிலையில், 48 மணி நேரத்திற்குப் பிறகு, ஏக்நாத் ஷிண்டே இந்தச் சம்பவத்திற்கு "ஒரு 1,000 முறை மன்னிப்புக் கேட்பதை" பொருட்படுத்தப் போவதில்லை என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pm Modi Maharashtra shivaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment