உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில், இடஒதுக்கீடு வழங்குவதற்கு பட்டியலிடப்பட்ட சாதிகளின் துணை வகைப்பாடு அனுமதிக்கப்படும் என்று வியாழக்கிழமை (ஆக.1, 2024) கூறியது.
இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு (6:1) இந்தப் பெரும்பான்மை தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பில், 2004 ஆம் ஆண்டு ஈ.வி.சின்னையா எதிராக ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தீர்ப்பை நிராகரித்தனர்.
ஆங்கிலத்தில் வாசிக்க
அப்போது, "பட்டியலிடப்பட்ட சாதிகள் ஒரே மாதிரியான வர்க்கம் அல்ல என்பதை வரலாற்று மற்றும் அனுபவ சான்றுகள் தெரிவிக்கின்றன" என்று தீர்ப்பை வாசிக்கும் போது தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இந்தத் தீர்ப்பின் பொருள், மிகவும் பிற்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பட்டியல் இனங்களுக்கான 15% இடஒதுக்கீட்டிற்குள் மற்றவர்களை விட அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது ஆகும்.
முன்னதாக, 2006 இல் பஞ்சாப் 50% ஒதுக்கீட்டையும் வால்மீகிகள் மற்றும் மசாபி சீக்கியர்களுக்கு முதல் முன்னுரிமையையும் பொது வேலைகளில் எஸ்சிக்களுக்கான ஒதுக்கீட்டிற்குள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“