மணிப்பூரில் உள்ள ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் 100-க்கும் மேற்பட்ட ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடத்துவதில், மாநில காவல்துறை பெரும் சவால்களை சந்திக்கிறது.
ஒரு குற்றச் செயல் தொடர்பான புகாரை குறிப்பிட்ட காவல்நிலையத்தில் பதிவு செய்யும்போது, அந்த சம்பவம் வேறொரு காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடந்திருந்தால், ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். சமந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு இது அனுப்பப்படும்.
மணிப்பூரில் கிட்டதட்ட 3 மாதங்கள் தொடர்ந்து வன்முறை நடைபெற்றுவருகிறது. 50,000 மக்கள் தங்கள் இடத்தைவிட்டு வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில், 3 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்து செல்லப்பட்ட சம்பவம் மே 4-ம் தேதி நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு அனுப்ப ஒரு மாதத்திற்கு மேல் தேவைப்பட்டுள்ளது. அதே காவல்நிலையத்தில் 2 குக்கி- சோமி இனத்தைச் சேந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இம்பாலில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சாய்குல் காவல்நிலையத்தில் மே 16ம் தேதி ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சீரோ எப்.ஐ.ஆர்-ஐ சமந்தப்பட்ட காவல்நிலயத்திற்கு ஒரு மாதம் கழித்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் சாய்குல் காவல்நிலையத்தில் 202 ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சாய்குல் காவல்நிலையம், மலையடிவாரத்தில் உள்ளது. இதற்கு அருகில் உள்ள இடங்கள் மேய்தி மக்கள் அதிகமாக உள்ளனர் என்று சாய்குல் காவல்நிலையத்தில் உள்ள அதிகாரி கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த வன்முறை சம்பவங்கள் சாய்குல் காவல்நிலையத்திற்கு சுற்றி உள்ள 20 கிலோ மீட்டருக்கு உட்பட்ட இடத்தில் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக சகோல்மாங், யாயின் கன்போக்பி, கிழக்கு இம்பாலில் உள்ள தவுபல் அணை உள்ளிட்ட பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சாய்குல் காவல்நிலையத்தில் உள்ள ஜீரோ எப்.ஐ.ஆர்-களின் எண்ணிக்கை மற்ற காவல்நிலையத்தை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. சுராசாந்துபூர் காவல்நிலையத்தில் 1,700 மேற்பட்ட ஜீரோ எப்.ஐ.ஆர் உள்ளது.
மேலும் இம்பாலில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு, காங்போக்பி காவல்நிலையத்தில் 800 மேற்பட்ட ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு அனுப்பப்படும் புகாரை விசாரிப்பதிலும் சிக்கல் இருப்பதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். “ ஒரு சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, இனியொரு சமூத்தினர் உள்ள இடத்திற்கு செல்ல முடியாது. அப்படி செய்தால் வன்முறை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் எங்களால் புகார் அளித்தவருடன் நாங்கள் செல்ல முடியாது. புகார் அளித்த நபரை தொலைப்பேசியில் அழைத்து விசாரணை தொடர்பாக விவரங்களை கேட்போம்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.