ராகேஷ் அஸ்தானா எஃப்.ஐ.ஆர் ரத்து : சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது அக்டோபர் 15ம் தேதி சிபிஐ லஞ்ச புகார் ஒன்றை பதிவு செய்தது. இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரோஷி மீதான வழக்கொன்றில் ஹைதராபாத்தை சேர்ந்த சனா பாபு என்ற தொழிலதிபர் பெயர் அடிபட்டது.
சனா பாபுவினை அவ்வழக்கில் இருந்து விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மற்றும் அவருடன் வேலை பார்த்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
ராகேஷ் அஸ்தானா எஃப்.ஐ.ஆர் ரத்து - லஞ்ச வழக்கு
இதனைத் தொடர்ந்து இவர்கள் மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எஃப்.ஐ.ஆரை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்தது சிபிஐ. அதில், ராகேஷ் அஸ்தானா லஞ்ச புகார் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் மீதான விசாரணைகள் நிலுவையில் உள்ளதாகவும் அறிவித்திருக்கிறது சிபிஐ.
மேலும் ராகேஷ் அஸ்தானாவின் மீதான ஆவணங்களை பலவற்றை மத்திய ஊழல் தடுப்பினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் அதன் மீதான விசாரணைகளும் நிலுவையில் இருப்பதாலும் FIRயை ரத்து செய்ய இயலாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது சிபிஐ தரப்பு.
சிபிஐ ராகேஷ் அஸ்தானா மீதான எஃப்.ஐ.ஆர்ரை ரத்து செய்ய இயலாது என்று கூறி உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம். ஆனால் இதற்கு மத்தியில் ராகேஷ் மீதான குற்றச்சாட்டினை முன் வைத்த சனா பாவுவை காணவில்லை, அவருக்கு கோர்ட் அனுப்பிய சம்மன்களுக்கும் பதில் அளிக்க வில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தகவல் அளித்தார் சதிஷ் டெகர். இது தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க