புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கருணாஸ் (19), விவேகானந்தன் (57) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் ஜாஃபர் சாதிக் நண்பர் போதைப் பொருளை பரவ விடுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து கவர்னர் தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளிகள் புதுச்சேரியில் போதைப்பொருட்களை பரவவிடுவதாக கூறப்படும் தகவல் குறித்தும் விசாரிக்கப்படும்” என்றார்.
தேசிய தலைநகர் டெல்லியில் 2024ஆம் ஆண்டு பிப்.15ஆம் தேதி 50 கிலோ போதைப் பொருள் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“