/indian-express-tamil/media/media_files/2024/11/27/bpHUWjSHazGwICbL0zmW.jpg)
டெல்லியில் அடுத்து சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டான 2024-25க்கான செலவினங்களைச் சமாளிக்க தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் (NSSF) ரூ.10,000 கோடி கடன் வாங்க மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.
Read In English: In run-up to elections, Delhi knocks at Centre’s door for Rs 10,000 crore loan
டெல்லி அரசு தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் கடன் வாங்குவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு, மாநிலத்தின் நிதித் துறையின் ஆட்சேபனைகளை மீறி, முதல்வர் அதிஷி மெர்லீனா கையெழுத்திட்டுள்ளார். இந்த நடவடிக்கை, மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) காரணமாக குறைந்த செலவை எதிர்பார்க்கிறது. ஆனால், உண்மையில், டெல்லி தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளது.
தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் டெல்லியைத் தவிர, மற்ற மூன்று மாநிலங்களான, அருணாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடன் வாங்குகின்றன. பெரும்பாலான மாநிலங்கள் தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளன, ஏனெனில் இந்தக் கடன்கள் சந்தைக் கடன்களை விட அதிகம் என்பது தான் முக்கிய காரணம்.
செப்டம்பர் 2 ஆம் தேதியன்று, டெல்லியின் முதன்மைச் செயலாளர் (நிதி) ஆஷிஷ் சந்திர வர்மா, இந்த நிதியாண்டில் தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் இருந்து கடன் வாங்குவதற்கான டெல்லி மாநில அரசின் விருப்பத்தை எதிர்த்ததாக கூறப்படுகிறது. "பெரிய அளவில் விரிவாக்கப்பட்ட வட்டிப் பொறுப்பு மற்றும் மாதிரி நடத்தை விதிகள் காரணமாக செலவினங்கள் குறைவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, செனாரியோ 1-ன் படி, (Scenario I) தேசிய சிறுசேமிப்பு நிதிய (NSSF) திட்டத்தில் இருந்து விலகுவதற்கான விருப்பத்தை ஏற்க பரிந்துரை செய்வதாக என்று ஆஷிஷ் சந்திர வர்மா கூறியிருந்தார்.
உண்மையில், கடந்த ஒரு வாரத்தில், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இலவச திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, 15 நாள் பிரச்சாரமான 'ரேவ்டி பே சர்ச்சா' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசாங்கத்தின் ஆறு ரெவ்டிகளை பட்டியலிட்டார். அதன்படி இலவச மின்சாரம், தண்ணீர், கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு பேருந்து டிக்கெட்டுகள் மற்றும் முதியவர்களுக்கு புனித யாத்திரை. ஆகிய திட்டங்களுடன் ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் விரைவில் மாதம் 1,000 ரூபாய் டெபாசிட் செய்யத் தொடங்குவதாக அவர் உறுதியளித்தார்.
இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த டெல்லி அரசாங்க செய்தித் தொடர்பாளர், “ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசாங்கம் எவ்வளவு கடனை எடுக்கும் என்பது பல காரணிகளை மனதில் வைத்து வழக்கமான நிர்வாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், டில்லி 2023-24 பொருளாதார ஆய்வறிக்கையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக டெல்லி அரசின் மொத்த கடன் 6.4 சதவீதத்தில் இருந்து 3.9 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கிறது.
இந்த கடன் குறைப்பு டெல்லியின் வரலாற்றில் மிகக் குறைவானது அல்ல, என்றாலும், இது இந்தியாவில் மிகக் குறைவானது" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். ஆனால் ஆஷிஷ் சந்திர வர்மாவுக்கும் மத்திய நிதி அமைச்சகத்துக்கும் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. இதனிடையே டெல்லி 2023-24ல் தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் கடன் வாங்கவில்லை, அதே சமயம் 2022-23ல் ரூ. 3,721 கோடி கடன் வாங்கியுள்ளது. முந்தைய மூன்று ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும் ரூ. 10,000 கோடி-க்கும் அதிகமாக கடன் வாங்கியுள்ளது.
உண்மையில், அது தனது பழைய கடன்களை முன்கூட்டியே செலுத்தத் தொடங்கியபோது மத்திய நிதி அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தின் நிதித் துறை ஆட்சேபனை தெரிவித்தபோதிலும் போதிலும், நிதி இலாகாவை வைத்திருக்கும் முதல்வர் அதிஷி, ஏற்கனவே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய சிறுசேமிப்பு நிதிய திட்டத்தில் இருந்து கடன் பெறுவதற்கு முன்வந்து “நிதித் துறை உடனடியாக நிதி அமைச்சகத்திடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின், நடப்பு நிதியாண்டிற்கான தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் கடன் திட்டத்தில் இருந்து விடுவிக்கப்படுவதை உறுதி செய்வது குறித்து கடந்த அக்டோபர் 10 குறிப்பில் அதிஷி கூறினார். அவரது குறிப்பில், முதன்மைச் செயலாளர் (நிதி) ஆஷிஷ் சந்திர வர்மா “நடப்பு நிதியாண்டில் நாங்கள் ஆறு மாதங்கள் ஆட்சியில் இருக்கிறோம். மேலும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வர இன்னும் 2-2.5 மாதங்கள் எடுக்கும் என்று மதிப்பிடலாம். இது மூலதனப் பணிகள் காரணமாக திட்டச் செலவினங்களுக்கு 4-4.5 மாதங்கள் மட்டுமே வழங்குகிறது.
தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் கடனை நடப்பு நிதியாண்டிற்கு மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது ஆஷிஷ் சந்திர வர்மாவுக்கு மிகவும் சிக்கலாகத் தோன்றியது. இது பாரிய வட்டிச் சுமையை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், மத்திய நிதி அமைச்சகத்தின் கணக்கீடுகளின்படி, நடப்பு நிதியாண்டு முதல் 2038-39 வரை தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் இருந்து கடனைத் தொடர்ந்தால், அசல் தொகையான ரூ. 1.27 லட்சம் கோடியுடன் கூடுதலாக ரூ.45,980 கோடி வட்டிச் சுமை ஏற்படும்.
மத்திய நிதி அமைச்சகம் ஜூலை மாதம் டெல்லி அரசுக்கு தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் இருந்து கடனைப் பெறுவதற்கான விருப்பம் ஒரு முறை மட்டுமே என்றும், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கிடைக்காது என்றும் தெரிவித்தது. அதே சமயம் ஆரம்பகால விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் கடனைத் தொடர திட்டமிட்டுள்ளதா? கடனை திருப்பிச் செலுத்தும் அட்டவணையைப் பின்பற்றுவது குறித்து உறுதிப்படுத்த வேண்டும் என்று டெல்லி அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தது. மேலும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான இரண்டு வழிகளை கூறியது.
இதில், வழி 1-ன் கீழ், மார்ச் 2039க்குப் பிறகு தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் கடனுக்காக எந்தப் பொறுப்பும் இல்லாமல் இந்த திட்டத்திலிருந்து வெளியேற டெல்லி அரசாங்கத்திற்கு விருப்பம் இருந்தது. அப்போது தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் கடனுக்கான நிலுவைத் தொகை ரூ. 31,697.47 கோடியாக இருக்கும். (2024 ஏப்ரல் 1 அன்று போலவே) சினாரியோ II இன் கீழ், டெல்லி அரசாங்கம் தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் கடனைத் தொடரும் விருப்பத்தைப் பெற்றால், 2024-25 முதல் 2038-39 வரை ஒவ்வொரு ஆண்டும் டெல்லிக்கு ரூ.10,000 கோடி வழங்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மார்ச் 31, 2039 வரை பெற்ற தேசிய சிறுசேமிப்பு நிதியத்தில் பெற்ற கடனுக்கு ரூ.57,661.68 கோடி வட்டிச் சுமையை ஏற்படுத்தும்.
சினாரியோ I மற்றும் சினாரியோ II இடையே உள்ள வட்டித் தொகையில் உள்ள வேறுபாடு ரூ.45,980 கோடியாக உள்ளது. மேலும், 2024-25 முதல் 2038-39 வரை ரூ. 1,26,697.47 கோடியை தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும், அதே காலக்கட்டத்தில் சினாரியோ I இன் கீழ் ரூ. 31,697.47 கோடி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.