மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) ஆட்சி நடைபெறுகிறது. இங்கு வரும் ஜூலை 8 ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல நடைபெறுகிறது. இதையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், பா.ஜ.க.வில் சேர்ந்ததற்காக 'தவம்' என வலம் வந்த பழங்குடியினப் பெண்ணுக்கு கிராம பஞ்சாயத்து தொகுதி ஒதுக்கி
டிஎம்சி ஸ்கோர் செய்துள்ளது. பிரச்சனையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு இனி இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரலில் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பழங்குடிப் பெண்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பேசபட்டனர். இதில் ஷியுலி மண்டி என்ற பழங்குடிப் பெண்ணும் ஒருவர் ஆவார். 27 வினாடிகள் கொண்ட வீடியோ பின்னடைவுக்கு வழிவகுத்த பிறகு, டிஎம்சி அதன் பெண் மாவட்டத் தலைவர் பிரதீப்தா சக்ரவர்த்தியை நீக்கியது.
நான்கு பழங்குடியினப் பெண்களை "தண்டாவத் பரிக்ரமா" செய்ய "வற்புறுத்தியதற்காக" ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்த பழங்குடி சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிஎம்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஞாயிற்றுக்கிழமை, ஷியுலி மண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், டிஎம்சி கட்சியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டதில் மகிழ்ச்சி என்றார். “எனது கட்சி என்னை ஒரு கிராம பஞ்சாயத்து பதவிக்கு வேட்பாளராக்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பழங்குடியினர் எங்கள் கட்சியுடன் உள்ளனர், பஞ்சாயத்து தேர்தலில் அவர்களின் ஆதரவை நாங்கள் பெறுவோம்” என்று மண்டி கூறினார்.
டிஎம்சி அவரை மாவட்டத்தின் தபன் பகுதியில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் நிறுத்தியுள்ளது. டிஎம்சி பெண்களை "பரிக்ரமா" செய்ய வற்புறுத்தியதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில், ஆளும் கட்சி மற்றும் பெண்களில் ஒருவரும் தாங்களாகவே அதைச் செய்ததாகக் கூறினர்.
இதுகுறித்து தக்ஷின் தினாஜ்பூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் பாபி சர்க்கார் கூறுகையில், இது பழங்குடியின மக்கள் மீது அக்கறை காட்டுவதை போல காண்பிக்கிறது. ஆனால் உண்மையில் இங்குள்ள மக்களுக்கு டிஎம்சி மீது எந்த மரியாதையும் இல்லை. இந்த நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், இதுபோன்ற செயலைச் செய்ய கட்டாயப்படுத்தியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க முயற்சிக்கின்றனர் என்று விமர்சனம் செய்தார்.
பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டிஎம்சியின் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்ட பிரிவு துணைத் தலைவர் சுபாஸ் சாகி பேசுகையில், இந்தப் பெண்களை பாஜக தவறாக வழிநடத்தியுள்ளது. பின்னர் தங்கள் தவறை உணர்ந்து
எங்கள் கட்சிக்கு திரும்பினர். பாஜகவில் இணைந்ததற்காக மன்னிப்பு கேட்டனர். ஆனால் அவர்கள் இப்போது எங்களுடன் அதிகம் இருக்கிறார்கள், கட்சி அவர்களை அங்கீகரித்துள்ளது என்றார்.
இதற்கிடையில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் வேட்புமனுத் தாக்கலின் போது வன்முறை வெடித்து இரண்டு பேர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சவுகத் மொல்லாவுக்கு மம்தா பானர்ஜி அரசாங்கம் Z- பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“