காங்கிரஸ் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் புதிய காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அக்கட்சி கடந்த ஆண்டு அறிவித்தது.
காங்கிரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. வலுவிழந்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் துடிப்புடன் செயல்பட வேண்டும் என பலரும் வலியுறுத்திவருகின்றன.
ஜி-23 தலைவர்கள்
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜி-23 என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் குழு சோனியாவிற்கு கடிதம் எழுதினர். காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினர் விலகியிருக்க வேண்டும் எனவும் அவர்கள் வெளிப்படையாக குரல் எழுப்பினர்.
இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து கட்சியை புதுப்பிக்க பல்வேறு திட்டங்களும் விவாதிக்கப்பட்டது.
அந்தவகையில், ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது. இவ்வாறு சூழல் இருக்க காங்கிரஸ் கட்சியில் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதி நிலவுகிறது.
ராகுல் பொறுப்பேற்க மறுப்பு?
காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்பதில் நிச்சயமற்ற நிலை உள்ளது. தேர்தலுக்கான ஒரு மாத கால அவகாசம் இன்று தொடங்குகிறது. ராகுல் காந்தி தலைமைப்பொறுப்பேற்க தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை அடுத்த வாரம் அல்லது ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ராகுல் தலைமை ஏற்க மறுப்பதால், 2024 மக்களவைத் தேர்தல் வரை இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தொடர்ந்து கட்சியை வழிநடத்துவதே சரியாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் கூறுகின்றனர். ஆனால், குடும்பத்தில் இருந்து யாரும் கட்சிக்கு தலைமை தாங்கக் கூடாது என்ற எண்ணத்தில் ராகுல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு மாநில காங்கிரஸ் தலைவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், அடுத்த பத்து நாட்கள் கட்சிக்கு முக்கியமானதாக இருக்கும். ராகுல், தலைவர் பதவிக்கு போட்டியிட தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவர் மறுத்தால், சோனியாவைத் தொடரச் செய்வதே அடுத்த வழி. அவருக்கு உதவியாக 2 துணைத் தலைவர்கள் ஒருவர் இளைஞராகவும், மற்றொருவர் மூத்த தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில் கட்சி ஒற்றுமையாக இருக்கும் என்றார்.
ஜி-23 தலைவர்கள் தங்களின் ஒருவர் தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிகிறது. நேரு குடும்பத்தினர் தலைவர் பதவி ஏற்க கூடாது எனக் கூறுகின்றனர். சிலர் சோனியா அல்லது ராகுல் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் கட்சியில் நிலையற்ற சூழல் நிலவுகிறது.
ஜி-23 தலைவர்களில் ஒருவர் கூறுகையில், வேட்பாளரை நிறுத்துவதற்கான பணிகள் நடத்து வருகிறது. காத்திருந்து பாருங்கள். 4 பேர் கொண்ட குழு காங்கிரஸை நடத்த அனுமதிக்க முடியாது என்றார். இருப்பினும் அவர் விரிவாகக் கூறவில்லை.
பாரத யாத்திரை
"Bharat yatra (பாரத யாத்திரையை) ராகுல் ஏற்று நடத்தவேண்டும் என்ற கட்சியின் முடிவால் ராகுல் தலைமைப்பொறுப்பிற்கு போட்டியிட மறுக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர், விவாதிக்கின்றனர். அவர் சிறந்த அரசியல்வாதி. அதற்கான பதில் அனைவரும் தெரியும். பாரத யாத்திரையில் அவர் தினமும் 15-20 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்வார். மக்களை சந்திப்பார். பாஜகவின் செயல்களை விமர்சிப்பார்" என்று ஒரு தலைவர் கூறினார்.
"ராகுலோ அல்லது குடும்பத்தில் உள்ள வேறுயாரும் போட்டியிடவில்லையென்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு எந்த பங்கும் இருக்காது" என்று ஒருவர் கூறினார். அடுத்த தலைவர் தேர்தலுக்கு மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, மீரா குமார், கமல்நாத், அம்பிகா சோனி மற்றும் முகுல் வாஸ்னிக் என யாரேனும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஒருமித்த வேட்பாளர் என யாரும் காணப்படவில்லை.
சோனியாவே தொடர வேண்டும் என பெரும்பாலான மூத்த தலைவர் கூறுகின்றனர். சோனியாவின் தொடர்ச்சி குறித்து பேசிய ஒரு தலைவர், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் தீவிர விசாரணையைக் கருத்தில் கொண்டு அவர் தொடர வேண்டும் என கூறுகின்றனர். அவரே தலைவராக தொடர வேண்டும். காங்கிரஸ் தலைவராக இருப்பவரை கைது செய்ய முடியாது. அவ்வாறு கைது கைது செய்யப்பட்டால் சர்வதேச ஊடகங்களில் விவாதிற்கு உட்படும். ஆனால் முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்றால் அவ்வாறு இருக்காது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.