Advertisment

5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53% சரிவு; பணக்காரர்களின் வருமானம் 39% உயர்வு

5 ஆண்டுகளில் இந்திய ஏழைகளின் வருமானம் 53% சரிந்துள்ளதாகவும், பணக்காரர்களின் வருமானம் 39% உயர்ந்துள்ளதாகவும் பீப்பிள்ஸ் ரிசர்ச் ஆய்வு கூறுகிறது

author-image
WebDesk
New Update
Post Office News: இத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பு லாபம்; இந்தத் திட்டங்களை கவனித்தீர்களா?

Sandeep Singh

Advertisment

Income of poorest fifth plunged 53% in 5 yrs; those at top surged: பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாத போக்கில், 1995 முதல் தொடர்ந்து அதிகரித்து வரும் 20% ஏழை இந்திய குடும்பங்களின் ஆண்டு வருமானம், 2015-16ல் இருந்த நிலையில் இருந்து 2020-21 தொற்றுநோய் ஆண்டில் 53% சரிந்துள்ளது. அதே ஐந்தாண்டு காலத்தில், பணக்காரர்களான 20% பேர் தங்கள் ஆண்டு குடும்ப வருமானத்தில் 39% வளர்ச்சியைக் கண்டனர், இது கொரோனாவின் பொருளாதார தாக்கம் பிரமிட்டின் அடிப்பகுதி மற்றும் மேல் பகுதியில் ஏற்படுத்திய கூர்மையான வேறுபாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த அப்பட்டமான K-வடிவ மீட்பு ICE360 சர்வே 2021 இன் சமீபத்திய சுற்றில் வெளிப்படுகிறது, இது மும்பையை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் (PRICE) பற்றிய பீப்பிள்ஸ் ரிசர்ச் மூலம் நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் மற்றும் அக்டோபர் 2021 க்கு இடையில், முதல் சுற்றில் 200,000 குடும்பங்களையும், இரண்டாவது சுற்றில் 42,000 குடும்பங்களையும் உள்ளடக்கியது. இது 100 மாவட்டங்களில் 120 நகரங்கள் மற்றும் 800 கிராமங்களில் எடுக்கப்பட்டது.

publive-image

தொற்றுநோயானது 2020-21 இல் பொருளாதார நடவடிக்கைகளை குறைந்தது இரண்டு காலாண்டுகளுக்கு ஸ்தம்பிக்க வைத்தது மற்றும் 2020-21 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3% சுருங்குவதற்கு வழிவகுத்தது, இந்த தொற்றுநோய் நகர்ப்புற ஏழைகளை மிகவும் பாதித்து அவர்களின் குடும்ப வருமானத்தை அரித்ததாக கணக்கெடுப்பு காட்டுகிறது.

வருமானத்தின் அடிப்படையில் மக்கள்தொகையை ஐந்து வகைகளாகப் பிரித்து, கணக்கெடுப்பின்படி, ஏழ்மையான 20% (முதல் குவிண்டில்) பிரிவினர் 53% என்ற மிகப்பெரிய சரிவைக் கண்டனர், இரண்டாவது குறைந்த குவிண்டில் (குறைந்த நடுத்தர வகை) அதே காலகட்டத்தில் அவர்களின் குடும்ப வருமானத்தில் 32% சரிவைக் கண்டது. நடுத்தர வருமானப் பிரிவினருக்கு சரிவு அளவு 9% ஆகக் குறைக்கப்பட்டாலும், முதல் இரண்டு குவிண்டில்களில் உள்ள மேல் நடுத்தர (20%) மற்றும் பணக்காரர்களின் (20%)  குடும்ப வருமானம் முறையே 7% மற்றும் 39% அதிகரித்துள்ளது.

தாராளமயமாக்கலுக்கு முந்தைய ஐந்தாண்டு காலத்தை விட, கடந்த ஐந்து ஆண்டுகளில், 20% பணக்கார குடும்பங்கள், சராசரியாக குடும்பத்திற்கு அதிக வருமானம் சேர்த்துள்ளனர் மற்றும் ஒரு குழுவாக அதிக வருமானம் சேர்த்துள்ளனர் என்று கணக்கெடுப்பு காட்டுகிறது. அதேநேரம் 20% ஏழ்மையான குடும்பங்களுக்கு நேர்மாறாக நடந்தது. சராசரியாக, அவர்கள் 1995 முதல் குடும்ப வருமானத்தில் குறைவைக் கண்டதில்லை. இருப்பினும், 2021 இல், கொரோனா காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய நாக் அவுட் பஞ்சில், அவர்கள் 2016 இல் சம்பாதித்ததில் பாதி அளவு மட்டுமே சம்பாதித்தனர்.

publive-image

2005க்கும் 2016க்கும் இடைப்பட்ட முந்தைய 11 வருட காலப்பகுதியில், பணக்காரர்களான 20% பேரின் குடும்ப வருமானம் 34% அதிகரித்தது என்பது பிரமிட்டின் அடிமட்டத்தில் உள்ள 20% ஏழைகளுக்கு எவ்வளவு சீர்குலைவை ஏற்படுத்தியிருக்கிறது என்ற உண்மையால் வலுப்படுத்தப்படுகிறது. முன்னதாக அந்த 11 வருட காலப்பகுதியில், ஏழைகளின் குடும்ப வருமானம் சராசரியாக 9.9% ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் 183% அதிகரித்தது.

இது பட்ஜெட்டிற்கு முன்னதாக, அரசு சரி செய்ய வேண்டிய முக்கிய வேலையாகும்.

"நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான பாதை வரைபடத்திற்கு வடிவம் கொடுப்பதற்காக நிதியமைச்சர் 2022-23 ஆம் ஆண்டிற்கான தனது பட்ஜெட் திட்டங்களை இறுதி செய்து வருகிறார்," என PRICE இன் MD மற்றும் CEO ராஜேஷ் சுக்லா கூறினார், மேலும்,  "நமக்கு ஒரு K வடிவ கொள்கையும் தேவை. ஸ்பெக்ட்ரமின் இரண்டு முனைகள் மற்றும் இரண்டிற்கும் இடையே பாலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி இன்னும் நிறைய யோசிக்கிறேன்." என்றும் சுக்லா கூறினார்.

இது நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது என PRICE நிறுவனர் மற்றும் சர்வேயின் ஆசிரியர்களில் ஒருவரான ராம பிஜபுர்கர் கூறினார். மேலும், "இல்லையென்றால், நாம் இரண்டு இந்தியாக்களின் கதைக்குத் திரும்புகிறோம், நாம் விரைவாக விடுபடுகிறோம் என்று நினைத்தோம். நல்ல செய்தி என்னவென்றால், DBT அல்லது தடுப்பூசி மூலம் அனைவருக்கும் நன்மைகளை வழங்குவதற்காக மிகவும் திறமையான மக்கள் நல அரசை நாம் உருவாக்கியுள்ளோம் என்றும் பிஐபுர்கர் கூறினார்.

1995ல் மொத்த குடும்ப வருமானத்தில் 20% பணக்காரர்கள் 50.2% ஆக இருந்த நிலையில், அவர்களின் பங்கு 2021ல் 56.3% ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம், அதே காலகட்டத்தில் 20% ஏழைகளின் பங்கு 5.9%லிருந்து 3.3% ஆகக் குறைந்துள்ளது.

India Inc ஐப் பொறுத்தவரை, இடையூறுகளைச் சமாளிக்க சிறந்த நிலையில் உள்ளது. தொற்றுநோய் பொருளாதாரத்தை மேலும் முறைப்படுத்துவதை துரிதப்படுத்தியது, பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களின் விலையில் பயனடைகின்றன. சாதாரண தொழிலாளர் பிரிவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடையே வேலை இழப்புகள் மிகவும் தெளிவாகத் தெரிந்தாலும், பெரிய நிறுவனங்களிடம் அந்த பிரச்சனை இல்லை என்றும் கணக்கெடுப்பு காட்டுகிறது.

ஏழ்மையான 20 சதவீதத்தினரிடையே கூட, கொரோனா முதல் அலை மற்றும் ஊரடங்கு நகர்ப்புறங்களில் பொருளாதார நடவடிக்கைகளில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்ததால், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் கிராமப்புற மக்களை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சாதாரண தொழிலாளிகள், சிறு வியாபாரிகள் வீட்டு வேலை செய்பவர்களுக்கு வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பு ஏற்பட்டது.

நகரங்களில் ஏழைகளின் பங்கில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2016 இல் 20 சதவீத ஏழைகளில் 90 சதவீதம் பேர், கிராமப்புற இந்தியாவில் வாழ்ந்தாலும், அந்த எண்ணிக்கை 2021ல் 70 சதவீதமாகக் குறைந்துள்ளது. மறுபுறம் இப்போது நகர்ப்புறங்களில் உள்ள ஏழ்மையான 20 சதவீதத்தினரின் பங்கு சுமார் 10 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

“அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 நகரங்களில் உள்ள சாதாரண தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தரவு பிரதிபலிக்கிறது. கிராமப்புறங்களில் குறைந்த நடுத்தர வருமானப் பிரிவினர் (Q2) நடுத்தர வருமானப் பிரிவினருக்கு (Q3) மாறியிருப்பதையும், நகர்ப்புறங்களில் Q3ல் இருந்து Q2க்கு கீழ்நோக்கிச் செல்வதையும் கணக்கெடுப்பின் போது நாங்கள் கவனித்தோம். உண்மையில், நகர்ப்புற ஏழைகளின் ஏழ்மை நிலை அதிகரிப்பு, முழு பிரிவினரின் குடும்ப வருமானத்தையும் கீழே இழுத்துவிட்டது,” என்று சுக்லா கூறினார்.

"அறையில் உள்ள யானையே முதலீடு" என்றார் பிஜபுர்கர். "நீண்ட கால கொள்கை ஸ்திரத்தன்மையின் மூலம் நம்பிக்கையை ஊக்குவித்தல் மற்றும் எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துதல் ஆகியவை அலை மீண்டும் எழும்பவும், சிறு வணிகம் மற்றும் தனிநபர்களை அதனுடன் சேர்த்து உயர்த்தவும் வேண்டும். பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன, அவர்களுக்கு மேலும் உதவி தேவையில்லை, ஆனால் நாம் பொருளாதாரத்தில் கீழ் பாதியில் உள்ளவர்களுக்கு வேலை செய்ய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Economy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment