வருமானவரி தேதி நீட்டிப்பு, ஏடிஎம் கட்டணம் இல்லை: நிர்மலா சீதாராமன் அறிவித்த புதிய சலுகைகள்
Income Tax Filing Deadline Extended Till June 30th - Nirmala Sitharaman: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்துறை நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானவரித் தாக்கல் தொடர்பான அனைத்திற்கும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Income Tax Filing Deadline Extended Till June 30th - Nirmala Sitharaman: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்துறை நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானவரித் தாக்கல் தொடர்பான அனைத்திற்கும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Income Tax Filing Deadline Extended Till June 30th: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Advertisment
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாடு முழுவதும் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. நடப்பு நிலவரங்களை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்துறை நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானவரித் தாக்கல் தொடர்பான அனைத்திற்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
தாமதமாக செலுத்தப்படும் வருமானவரி கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் 12% இருந்து 9% ஆக குறைக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் தாமத கட்டணம், அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மூன்று மாதங்களுக்கு பிற வங்கி ஏடிஎம்களில் கட்டணமில்லாமல் பணம் எடுக்க சலுகை அளிக்கப்படுகிறது. வங்கிகளுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வங்கிப் பணிகளுக்காக நேரில் செல்வதைத் தவிர்த்து டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் தொழில்துறையினருக்கான நிவாரணத் தொகையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்
தொழில் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூட்டத்தைக் கூட்ட 60 நாட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடும் தொழில்துறையினரின் வசதிக்காக சுங்கத் துறை 24 மணி நேரமும் செயல்படும்.
கட்டுப்பாட்டாளர்கள், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் அனைத்தும் பங்குச் சந்தையில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் ஏற்ற இறக்கம் ஆகியவற்றைக் கண்காணிக்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன. செபி சில வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்து அதன் நிலைப்பாட்டைக் கூறியுள்ளது.” என்று அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"