ஐ.டி.ஆர் தாக்கல் செய்தால் மட்டும் போதாது : அபராதத்தை தவிர்க்க இதனை செய்ய வேண்டும்

ITR Verification: சரிபார்க்கும்வரை, முழுமையாக தாக்கல் செய்யப்பட்டதாக கருதப்படாது.  இந்த விவரத்தை  மனதில் கொள்ள வேண்டும்.

Income Tax Filing Tamil News, ITR Verification: இந்தியாவில் வருமான வரி செலுத்த கடைசி தேதி டிசம்பர் 31 வரை என வரையெறுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் வருமான வரி வருமானம் (ஐடிஆர்) தாக்கல் செய்யவேண்டும். அப்படி செய்ய தவறினால், கடைசி தேதிக்குப் பிறகு அபராத்த்துடன் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டிய நிலை வரும். காலக்கெடு முடிவடைவதற்குள் உங்கள் வருமான வரியை தாக்கல் செய்துவிட்டாலும், நீங்கள் தாக்கல் செய்ப்பட்ட வருமானவரி, சரிபார்க்கும்வரை, முழுமையாக தாக்கல் செய்யப்பட்டதாக கருதப்படாது. புதிய வரி செலுத்துவோர்  இந்த விவரத்தை முக்கியமாக  மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

How to file income tax return: ஐடிஆர் சரிபார்ப்பு செய்வது எப்படி?

ஐடிஆர் சரிபார்ப்பு ஆன்லைனில் செய்துகொள்ளும் வசதி உள்ளது. இதற்கு வருமான வரித்துறை  120 நாட்கள் அவகாசம் அளிக்கிறது. இதில் எளிதான வழி மின்னணு சரிபார்ப்பு. வருமான வரி செலுத்துவோர் இதை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ஆதார் அட்டை மூலம் ஐடிஆர் சரிபார்ப்பு செய்வதற்கு, உங்கள் பான் உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட வேண்டும்.

http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் சென்று மின் சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்களது மொபைலுக்கு வரும் ‘ஆதார் OTP ஐ உள்ளீடு செய்து சரிபார்ப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதைச் செய்யும்போது, ​​உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு செய்தி அனுப்பப்படும்., அதனைத் தொடர்ந்து, இணையதளத்தில் OTP ஐ வைத்து சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்த பிறகு உங்கள் சரிபார்ப்பு முடிவடையும்.

வங்கி கணக்கு மூலம் ஐடிஆர் சரிபார்ப்பு

ஐடிஆர் தாக்கல் உங்கள் வங்கி கணக்குகள் மூலம் சரிபார்க்கப்படலாம். ஆனால் குறிப்பிட்ட வங்கிகள் மட்டுமே இந்த வசதியை செய்துள்ளது. உங்களது வங்கி இணையதளத்தில், உங்கள் பெயர், கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்து, வங்கி பதிவுகளில் ஏற்கனவே உள்ள விவரங்களின்படி விவரங்களை நிரப்ப வேண்டும். உதாரணமாக, பான் கார்டில் உள்ள உங்கள் பெயர் கணக்கின் பெயருடன் பொருந்த வேண்டும்.

சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், நீங்கள் ‘எனது கணக்கு’ தாவலில் ஈ.வி.சியை உருவாக்க முடியும். அதனைத் தொடாந்து, உங்கள் மொபைலில் ஒரு குறியீட்டைப் பெறுவீர்கள். அடுத்து எனது கணக்கு தாவலில் உள்ள ‘மின் சரிபார்ப்பு’ என்பதைக் கிளிக் செய்து இப்போது குறியீட்டை வைத்து ‘சமர்ப்பி’ என்பதை உள்ளிடவும். சரிபார்ப்பு நிறைவடையும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Income tax filing tamil news itr verification income tx department simpl way for itr filling239528

Next Story
கர்நாடகா சட்ட மேலவை துணைத் தலைவர் மர்ம மரணம்: ரயில் தண்டவாளத்தில் பிணம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com