ஐ.டி.ஆர் இன்னும் தாக்கல் செய்யவில்லையா? அபராதம் இரு மடங்கு

ITR Filing: இந்தியாவில், குறிப்பிட்ட நேரத்தில் வருமானவரி செலுத்த தவறினால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பதை பற்றி பார்போம்

Income Tax Return Tamil News: மதிப்பீட்டாளர்கள் தங்கள் வருமான வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) சரியான நேரத்தில் தாக்கல் செய்ய தவறினால் ரூ .10,000 வரை அபராத கட்டணம் வசூலிக்கப்படும். 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட யூனியன் பட்ஜெட் விதிப்படி, பிரிவு 234 எஃப் பிரிவில், இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் யு / எஸ் 23 எஃப் விதிகளின்படி, மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னதாக தாமதமாக செலுத்தப்பட்ட வரிக்கு ரூ .5,000 , கட்டணவும், வேறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாமதமாக செலுத்தப்பட்ட வரிக்பு ரூ .10,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மொத்த வருமானம் ரூ .5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், அபராத கட்டணம் தொகை ரூ .1,000 ஐ தாண்டாது.

“வருமான வரிச் சட்டம், 1961 (‘ஐ.டி சட்டம்’) இன் கீழ் பிரிவு 234 எஃப் இன் விதிகளின் படி, வரி செலுத்துவோர் மதிப்பீட்டாளர், ஐ.டி சட்டத்தின் பிரிவு 139 (1) இல் இந்த அபராத கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆர்எஸ்எம் இந்தியாவின் நிறுவனர் டாக்டர் சுரேஷ் சூரனா தெரிவித்துள்ளார். பொதுவாக வருமானவரி தாக்கல் செய்யும் கடைசி தேதி, நீட்டிக்கப்படாவிட்டால், தனிநபர்கள் / எச்.யு.எஃப் / நிறுவனங்களுக்கு ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை 31 ஆகும். ஆனால்  தணிக்கை தேவைப்படும் இடங்களில், கடைசி தேதி செப்டம்பர் 30 ஆக உள்ளது.

ஆனால் தற்போது, கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் பல்வேறு வரி இணக்கங்களுக்கான காலக்கெடுவை நீட்டிப்பதன் விளைவாக மதிப்பீட்டு ஆண்டுக்கான (ஐ.ஒய்) 2020-21 ஐ.டி.ஆர். தாக்கல் செய்ய வேண்டிய தேதி முதலில் நவம்பர் 30, 2020 வரை, பின்னர் டிசம்பர் 31, 2020 வரை, இறுதியாக ஜனவரி 10, 2021 வரை நீட்டிக்கப்பட்டது.

மேலும் வருமான வரி தாமதமாக தாக்கல் செய்தால் ரூ .5,000 வரை அபராத கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட தேதியின் இறுதி  நிதியாண்டின் டிசம்பர் 31 வரை வசூலிக்கப்படுகிறது. அதன் பின்னர் அது இரட்டிப்பாகும். இதனால் ஜனவரி 10, 2021 கடைசி நாளில் வருமானவரி தாக்கல் செய்யவி்லலை என்றால் அபராதத்துடன் செலுத்த வேண்டும். 2020 ஜனவரி 10 ஆம் தேதிக்கு தணிக்கை பொருந்தாத மதிப்பீட்டாளர்களின் விஷயத்தில் வரி வருவாய் தாக்கல் செய்வதற்கான தேதியை சிபிடிடி நீட்டித்துள்ளது, இருப்பினும், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் u / s 234F வழக்கில் எந்தவிதமான தளர்வுகளும் வழங்கப்படவில்லை.

2020 ஜனவரி 10 ஆம் தேதி வரை எந்தவொரு மதிப்பீட்டாளரும் வருமானத்தைத் தாக்கல் செய்கிறார், அத்தகைய தேதி பொருந்தக்கூடியது. ஐ.டி சட்டம் 234 எஃப் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்படும்  எவ்வாறாயினும், ஜனவரி 10, 2020 க்கு அப்பால் எந்த தாமதமும் ரூ .10,000 யூ / வி 234 எஃப் அபராதத்தை கட்டும் நிலைக்கு தள்ளப்படுவார் ”என்று டாக்டர் சூரனா கூறுகிறார்.

இதனால் 2021 ஜனவரி 10 தேதியை நீங்கள் தவறவிட்டால் (மேலும் நீட்டிக்கப்படாவிட்டால்) அந்த நேரத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான உங்கள் ஐடிஆரை தாக்கல் செய்யத் தவறினால், இரட்டை தாமத கட்டணம் உடனடியாக வசூலிக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Income tax return tamil news income tax return filling penalty is for late filing

Next Story
குடியரசுத் தின விழா சிறப்பு விருந்தினர் : போரிஸ் ஜான்சன் பயணம் ரத்து
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com