பட்ஜெட்டில் மாற்றப்பட்ட வருமான வரி விகிதம் என்ன? தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

interim Budget: "5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட தனி நபருக்கு, முழு வரி விலக்கு" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

By: February 3, 2019, 6:20:44 PM

பட்ஜெட் என்றாலே வருமான வரி விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் இந்த முறை 2019-20-க்கான வருமானவரி திருத்தம் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

2019-20 பட்ஜெட் தாக்கலில் பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல், வருமான வரி விதிகளில் நடுத்தர குடும்பத்தினர் பயனடைவார்கள் என்றார். இடைக்கால வரவுசெலவுத் திட்டமாக இது இருப்பதால், முழுமையான திட்டங்களை அறிவிப்பதில் அரசாங்கம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

சரி இதில் தெரிந்துக் கொள்ள வேண்டிய 5 விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

நிதியமைச்சர் பியுஷ் கோயல் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சிட்டிசன் கேட்டகரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் “5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட தனி நபருக்கு, முழு வரி விலக்கு” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, மற்ற வரிகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

6.5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள தனி நபர்கள், சேவிங் டேக்ஸ் ஸ்கீம் சட்டத்தின் கீழ், பி.பி.எஃப், ஈ.எல்.எஸ்.எஸ், என்.எஸ்.சி, இன்சூரன்ஸ் ஆகிய திட்டத்தின் கீழ் 1.5 லட்சத்தை சேமிக்கலாம்.

கல்வி கடன்கள், தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), மருத்துவ காப்பீடு, மூத்த குடிமக்களுக்கான மருத்துவச் செலவினங்கள் ஆகியவற்றில் 2 லட்சம் வரை வருமான வரி விலக்குகளை எந்த ஒரு தனி நபரும் பெற முடியும்.

ஸ்டேண்டர்டு டிடக்‌ஷனை 40000-லிருந்து, 50000-மாக உயர்த்த கோயல் முன்மொழிந்துள்ளார். அதன்படி ஊதியம் பெறுபவர்கள் ஸ்டேண்டர்டு டிடக்‌ஷன் ரூ. 50,000-ஐ க்ளைம் செய்துக் கொள்ள முடியும்.

இது தவிர, இரண்டாவது சொந்த வீட்டுக்கான, வருமான வரிக்கு விலக்கு அளிக்க முன்மொழிந்தார். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருந்தால், அசல் வாடகையை வருமான வரியாக செலுத்தப்பட வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் உள்ளது.

மேற்கூறிய அனைத்து அறிவிப்புகளுக்கும் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறும் மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒப்புதல் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Income tax slab 2019 20 interim budget

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X