Advertisment

பி.பி.சி-யில் ஐ.டி ரெய்டு; ஒரு நாள் இந்தியாவில் எந்த ஊடகமும் இருக்காது - மம்தா பானர்ஜி

பி.பி.சி.,யின் அலுவலகங்களில் ஐ.டி ரெய்டு விரக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும் மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதைக் காட்டுகிறது – எதிர்க்கட்சிகள்

author-image
WebDesk
New Update
பி.பி.சி-யில் ஐ.டி ரெய்டு; ஒரு நாள் இந்தியாவில் எந்த ஊடகமும் இருக்காது - மம்தா பானர்ஜி

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்பு படம்)

பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித் துறை நடத்திய ஆய்வுகள் பா.ஜ.க அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கை பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.

Advertisment

"பி.பி.சி.,யில் வருமான வரித்துறை ஆய்வுகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது... ஒரு நாள், இந்தியாவில் எந்த ஊடகமும் இருக்காது" என்று முதல்வர் பானர்ஜி கூறியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: லைஃப் மிஷன் வழக்கு; கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் கைது

செவ்வாயன்று, வருமான வரித்துறையானது டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி.,யின் வளாகத்தில், பரிமாற்ற விலை விதிகள் மற்றும் லாபத்தைத் திசைதிருப்பல் ஆகியவை "இணங்கவில்லை" என்று குற்றம் சாட்டியதற்கு எதிராக ஆய்வுகளை மேற்கொண்டது. 2002 குஜராத் கலவரம் பற்றிய பி.பி.சி ஆவணப்படம் அரசியல் சர்ச்சையைத் தூண்டிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு அந்த ஆவணப் படத்தைப் பகிரும் இணைப்புகளை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

பா.ஜ.க ஆளும் மத்திய அரசைக் கண்டித்த காங்கிரஸ், இந்த ஆய்வுகளைக் கண்டித்துள்ளதுடன், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது என்று கூறியது.

“பி.பி.சி.,யின் அலுவலகங்களில் ஐ.டி ரெய்டு விரக்தியை வெளிப்படுத்துகிறது மற்றும் மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதைக் காட்டுகிறது. இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கை இனியும் தொடர முடியாது” என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

சி.பி.எம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் அரசாங்கத்தை கடுமையாக சாடின. “ஐ.டி, இ.டி மற்றும் சி.பி.ஐ ஆகியவை அதானியின் அலுவலகத்தை அடையவில்லை, ஆனால் ஐ.டி துறையின் ஒரு குழு பி.பி.சி.,யின் டெல்லி அலுவலகத்தில் தேடுகிறது. இந்தியாவில் எஞ்சியிருக்கும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் இது. உலக பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 150வது இடத்தில் உள்ளது. இந்தியா இப்போது மேலும் நழுவும் என்பது தெளிவாகிறது” என்று பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி குன்வர் டேனிஷ் அலி கூறினார்.

கூடுதல் தகவல்கள்: PTI

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Mamata Banerjee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment