Advertisment

என்.ஆர்.ஐ சகோதரரிடம் பெறப்பட்ட பரிசுக்கு வரி விலக்கு: வருமான வரி தீர்ப்பாயம்

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ஒரு வரி செலுத்துபவரின் மொத்த வருமானத்தில் ரூ.20 லட்சம் பரிசுத்தொகையின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டதால் அதை நீக்குமாறு மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
tax zoom lense

வருமான வரி தீர்ப்பாயம் (ITAT) பெஞ்ச் பின்னர் தணிக்கை அறிக்கையை குறிப்பிட்டு, மேல்முறையீட்டாளர் தனது சகோதரரின் பரிசு வருமான வரிச் சட்டத்தின் 56(2)(x) பிரிவின் கீழ் விலக்கப்பட்டுள்ளது/விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் காட்டியதாகக் குறிப்பிட்டது.

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், ஒரு வரி செலுத்துபவரின் மொத்த வருமானத்தில் ரூ.20 லட்சம் பரிசுத்தொகையின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டதால் அதை நீக்குமாறு மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

2021-22-ம் ஆண்டிற்கான தேசிய முகமற்ற மேல்முறையீட்டு மையம் (NFAC) பிறபித்த உத்தரவை எதிர்த்து, மத்திய செயற்பாட்டு மையம் (CPC-மதிப்பீட்டு அதிகாரி) பிறப்பித்த திருத்த உத்தரவுக்கு எதிரான அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. 

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) சமீபத்தில், வரி செலுத்துவோர் தனது வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) சகோதரரிடமிருந்து பெறப்பட்ட ரூ. 20 லட்சத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்று தீர்ப்பளித்தது. ஏனெனில், பரிசு பெற்றவர் நன்கொடையாளரின் நெருங்கிய உறவினர் ஆவார்.

“எனவே, ஒரு சகோதரரிடமிருந்து வரும் அன்பளிப்பு வரி செலுத்தும் உறவினரின் கைகளுக்கு வரும்போது வரி விதிக்கப்படாது. வரி செலுத்துபவர் பெறப்பட்ட பரிசின் அடையாளம், கடன் தகுதி மற்றும் உண்மையான தன்மை மற்றும் நன்கொடையாளருடனான உறவை நிரூபித்துள்ளார்” என்று ஐ.டி.ஏ.டி - மும்பை பிரசாந்த் மகரிஷியின் (கணக்காளர் உறுப்பினர்) பெஞ்ச் ஆகஸ்ட் 16-ம் தேதி குறிப்பிட்டது.

“வரி செலுத்துபவரால் பெறப்பட்ட ரூ. 20,00,000/- மேற்கண்ட தொகை வரி செலுத்துபவரின் வருமானம் அல்ல என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மேற்கூறிய தகவல்கள் அதிகாரிகளிடம் இருந்தாலும், மதிப்பீட்டாளரின் மொத்த வருமானத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது” என்று பெஞ்ச் மேலும் கூறியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நீண்டகாலமாக வசிப்பவரான அவரது குடியுரிமை இல்லாத சகோதரரிடமிருந்து பெறப்பட்ட பரிசு என்பதால் கூடுதலாக ரூ.20 லட்சத்தை நீக்குமாறு மதிப்பீட்டு அதிகாரிக்கு அது உத்தரவிட்டது.

2021-22-ம் ஆண்டிற்கான தேசிய முகமற்ற மேல்முறையீட்டு மையம் (NFAC) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஒரு வரி செலுத்துபவரின் கோரிக்கையை வருமானவரி தீப்பாயம் நிறைவேற்றியது. இதில் மத்திய செயற்பாட்டு மையம் (CPC-மதிப்பீட்டு அதிகாரி) பிறப்பித்த திருத்த உத்தரவுக்கு எதிரான அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் துகள்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வரி செலுத்துபவர், ஜனவரி, 2022-ல் தனது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தார், மொத்த வருமானம் ரூ.19.88 லட்சம். இருப்பினும், சி.பி.சி-ஆல் அவரது வருமானம் ரூ. 40.29 லட்சமாகக் கணக்கிடப்பட்டது. அதில் ரூ. 39.88 லட்சம் வணிக வருமானம் மற்றும் ரூ. 40,500 மற்ற ஆதாரங்களில் இருந்து வருமானமாக இரட்டிப்பு வரி விதிக்கப்பட்டது. அவரது என்.ஆர்.ஐ சகோதரரிடமிருந்து பெறப்பட்ட ரூ. 20 லட்சத்தை அன்பளிப்பாகக் குறிப்பிட்டு கூடுதலாகச் சேர்க்கப்பட்டது.

வருமான வரிச் சட்டத்தின் 154வது பிரிவின் கீழ் திருத்தம் செய்யக் கோரி மதிப்பீட்டு அதிகாரியிடம் அவர் விண்ணப்பம் செய்தார், அது நிராகரிக்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட அவர் NFAC-ஐ அணுகினார். இருப்பினும், வரி செலுத்துபவரின் பரிசின் உண்மையான தன்மையை வெளியிடவில்லை என்பதைக் கவனித்த NFAC, நன்கொடையாளரின் கடன் தகுதியில் சந்தேகத்தை எழுப்பியது மற்றும் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது, அவரை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) மும்பை பெஞ்ச்சை அணுகத் தூண்டியது.

மேல்முறையீட்டாளர் ஏற்கனவே மற்ற ஆதாரங்களில் இருந்து வருமானம் ரூ. 40,500 வட்டி வருமானம் என்று வெளிப்படுத்தியிருப்பதை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) கண்டறிந்தது, இது CPC-IO ஆல் மீண்டும் ஒருமுறை சேர்க்கப்பட்டு, அவருடைய வருமான வரி செலுத்துவதை செயலாக்குகிறது. எனவே, அவரது மொத்த வருமானத்தில் இருந்து அதை நீக்க வேண்டும்.

வருமான வரி தீர்ப்பாயம் (ITAT) பெஞ்ச் பின்னர் தணிக்கை அறிக்கையை குறிப்பிட்டு, மேல்முறையீட்டாளர் தனது சகோதரரின் பரிசு வருமான வரிச் சட்டத்தின் 56(2)(x) பிரிவின் கீழ் விலக்கப்பட்டுள்ளது/விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் காட்டியதாகக் குறிப்பிட்டது.

மேலும், இந்த பெஞ்ச் தனது என்.ஆர்.இ சேமிப்பு வங்கி கணக்கு மூலம் நன்கொடையாளர் சகோதரர் வழங்கிய காசோலைகள் உட்பட பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, பரிசு வரவுக்கு தகுதியானது என்று கண்டறிந்தது. “வரிசெலுதுபவரின் தந்தையின் பெயரும் நன்கொடையாளரின் தந்தையின் பெயரும் ஒன்றுதான். எனவே, வரிசெலுத்துபவரும், நன்கொடை அளிப்பவரும் உண்மையான சகோதரர்கள் என்பதை மறுக்க முடியாது” எனக்கூறி, கூடுதலாக ரூ.20 லட்சத்தை நீக்குமாறு மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டு, மேல்முறையீட்டை அனுமதித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Income Tax
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment