Income Tax Verification Tamil News: இந்தியாவில் 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வதற்கான டிசம்பர் 31-ந் தேதி (இன்று) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டள்ளது. டிசம்பர் 31 க்குள் ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய தவறினால் அபாராத்துடன் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.பொதுவாக ஜூலை 31-ந் தேதி ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய கடைசி தேதியாக கணக்கிடப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் 31- கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருமானவரி செலுத்துவோர் டிசம்பர் 31 க்குள் ஐ.டி.ஆரை தாக்கல் செய்யத் தவறினால், குறைந்தபட்சம் 50 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், விதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதில் ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதனை சாரிபாத்தால் மட்டுமே வரி செலுத்துவது முழுமையடையும்.
Income Tax Verification: வருமான வரி (ஐ.டி.ஆர்) தாக்கல்
புதிய அறிவிப்பின் படி ஐ.டி.ஆரை தாக்கல் செய்வது மூன்று படிநிலைகள் உள்ளன. அதில் முதல் படி வரி வருமானத்தை தாக்கல் செய்வது, இரண்டாவது படி ஐ.டி.ஆரின் சரிபார்ப்பு மூன்றாவது படி வருமான வரித் துறையால் ஐ.டி.ஆரை செயலாக்குவது. மேலும் வரி செலுத்துவோர் தாக்கல் செய்த ஐ.டி.ஆரை 120 நாட்களுக்குள் சரிபார்க்க வேண்டும், அதைச் செய்யத் தவறினால் ஐடிஆர் செல்லாது என அறிவிக்கப்படும். ஐ.டி.ஆரை ஈ-சரிபார்க்கும் முன், வரி செலுத்துவோர் நிரந்தர கணக்கு எண் (பான்), ஐ.டி.ஆர் தாக்கல் செய்த மதிப்பீட்டு ஆண்டு, மற்றும் மின்னணு சரிபார்ப்புக் குறியீடு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
பின்வரும் வழிமுறைகளின் மூலம் ஒருவர் ஈ.வி.சியை உருவாக்க முடியும்
நெட்பேங்கிங் (Net Banking)
வருமான வரி செலுத்துவோர் வங்கிக் கணக்கில் உள்நுழைந்து ‘வரி’ என்ற விருப்பத்தை தேர்வு செய்து, மின் சரிபார்ப்பு இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு சென்று ‘என் கணக்கு’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ஈ.வி.சியை உருவாக்குவதற்கான விருப்பத்தைக் காண்பிக்கும். இது தொடர்பான குறியீடு வரி செலுத்துவோரின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு (email) அனுப்பப்படும். இந்த வழியில் நீங்கள் எளிதாக ஈ.வி.சியை உருவாக்கலாம்.
வங்கி கணக்கு எண் (Account Number)
வங்கி கணக்கு மூலம் வருமான வரியை சரிபார்க்கும் வசதி ஒரு சில வங்கிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. வரி செலுத்துவோர் இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு சென்று, ‘சுயவிவர அமைப்புகளுக்கு’ செல்வதன் மூலம் வங்கி கணக்குகளை சரிபார்க்க முடியும். அந்தப் பக்கத்தில், வங்கி பெயர், கணக்கு எண், மொபைல் எண் மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி கோட் போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். நீங்கள் உள்ளீடு செய்த விபரங்களை சரிபார்த்த பிறகு, வரி செலுத்துவோர் ‘எனது கணக்கு’ விருப்பத்திற்கு சென்று ‘ஈ.வி.சி உருவாக்கு’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான குறியீடு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
வங்கி ஏடிஎம் (Bank ATM)
வருமானவரி வரி செலுத்துவோர் தங்களது டெபிட் கார்டை ஸ்வைப் செய்து, ‘மறு தாக்கல் செய்வதற்கான PIN ஐ உருவாக்கு’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வசதி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
ஆதார் (AADHAR CARD AND OTP)
வரி செலுத்துவோர் தங்கள் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும் மற்றும் பான் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வரி செலுத்துவோர் ‘எனது கணக்கு’விருப்பத்திற்கு சென்று,’ இ-வெரிஃபை ரிட்டர்ன் ‘என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு 6 இலக்க OTP அனுப்பப்படும். அந்த OTP ஐ உள்ளிட்டு செய்து சமர்ப்பித்த பின், ஐ.டி.ஆர் சரிபார்க்கப்படும்.
ஐ.டி.ஆர்-வி கையொப்பமிடப்பட்ட நகலை வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் இது ஒரு பக்க ஆவணம், என்பதால் இதில் ப்ளூ இன்க் மூலம் கையொப்பமிட்டு, சாதாரண போஸ்ட் அல்லது ஸ்பீடு போஸ்ட் வழியாக அனுப்பப்பட வேண்டும். இந்த ஆவணத்துடன் எந்தவொரு துணை ஆவணத்தையும் அனுப்ப தேவையில்லை. மேலும் இந்த ஆவணம் வருவானவரித்தறையினால் பெறப்பட்டவுடன் வரி செலுத்துவோருக்கு இமெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும்.