Advertisment

உலகக் கோப்பை தோல்வி; காஷ்மீர் பல்கலை. மாணவர்கள் மோதல்: 7 பேர் கைது

பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டதாக காஷ்மீரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
IND VS AUS Final CWC Kashmir university students booked UAPA face off tamil news

பல்கலைகழக அதிகாரி ஒருவர் கூறுகையில், போலீசார் பல்கலைக்கழக விடுதிக்கு வந்து 7 மாணவர்களையும் ஒப்படைக்குமாறு வார்டனிடம் கேட்டனர்.

india-vs-australia | jammu-and-kashmir இந்திய மண்ணில் பரபரப்பாக நடைபெற்ற 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. 10 போட்டிகளை தொடர்ச்சியாக வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையில் ஆழ்த்தியது. 

Advertisment

இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் காஷ்மீரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் புகார் அளித்துள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்:7 Kashmir university students arrested, booked under UAPA over campus face-off after World Cup final

அவரது புகாரைத் தொடர்ந்து 7 மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டனர். 

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இறுதிப் போட்டி நடந்த நவம்பர் 19 ஆம் தேதி இரவு மத்திய காஷ்மீரின் கந்தர்பாலில் உள்ள ஷுஹாமாவில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (SKUAST) கால்நடை அறிவியல் (SKUAST) விடுதியில் பல மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், அது தொடர்பாக தற்போது ஒரு மாணவர் புகார் அளித்துள்ளார். .

ஷேர்-இ-காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன் டீன் டாக்டர் முகமது அபுபக்கர் அகமது சித்திக், மாணவர்கள் கைது செய்யப்பட்டதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார். “அடிப்படையில், ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கைப் பற்றிய சமீபத்திய தகவல்கள் என்னிடம் இல்லை. மாணவர்கள் எங்களிடம் புகார் எதுவும் கொடுக்கவில்லை,'' என்றார்.

இருப்பினும், கால்நடை அறிவியல் டீன் டாக்டர் துஃபைல் பண்டே இந்த சம்பவத்தை மறுத்தார். கால்நடை அறிவியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நவம்பர் 19 இரவு, இந்தியா போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, இளங்கலை விடுதியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

விடுதிகளில் சுமார் 300 மாணவர்கள் வசிக்கின்றனர், அவர்களில் 30-40 பேர் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நவம்பர் 19 இரவு, சிலர் மோதல் போக்கை காட்டினர். காஷ்மீருக்கு வெளியில் இருந்து வந்த மாணவர்கள், உள்ளூர் மாணவர்கள் (இந்தியாவின் தோல்விக்குப் பிறகு) கொண்டாடி, தங்களைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார்கள்.

துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், வார்டன் அல்லது வேறு எந்த அதிகாரிக்கும் புகார் அளிக்கப்படவில்லை. மாணவர்கள் நேரடையாக போலீஸாரிடம் சென்றார். இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்களா இல்லையா என்பது போலீஸாருக்கு மட்டுமே தெரியும்." என்று அவர் கூறினார்.

20 வயது மாணவரின் புகாரின் அடிப்படையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 505 (வேறு எந்த வகுப்பினர் அல்லது சமூகத்திற்கு எதிராக குற்றம் செய்ய ஒரு வகுப்பை அல்லது சமூகத்தை தூண்டும் நோக்கம்) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த மாணவர் தனது புகாரில், மற்ற ஏழு மாணவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, போட்டிக்குப் பிறகு, அவர்கள் "நமது நாட்டை ஆதரிப்பவர் என்பதற்காக என்னை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினர். சுட்டுக் கொன்று விடுவதாக ஏன் என்னை மிரட்டினார். மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களையும் எழுப்பினர். இது ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வெளியில் இருந்து வந்துள்ள மாணவர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது" என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

பல்கலைகழக அதிகாரி ஒருவர் கூறுகையில், போலீசார் பல்கலைக்கழக விடுதிக்கு வந்து 7 மாணவர்களையும் ஒப்படைக்குமாறு வார்டனிடம் கேட்டனர். “அவர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு கந்தர்பால் காவல் நிலையத்தில் உள்ளனர். பல்கலைக்கழக அதிகாரிகள், காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு, இந்த விவகாரத்தை சீர்செய்ய முயற்சித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நான்காம் ஆண்டு இளங்கலை கால்நடை அறிவியல் மாணவர்கள்." என்று அவர் கூறினார். 

இது தொடர்பாக கந்தர்பால் காவல்துறை கண்காணிப்பாளர், நிகில் போர்கரை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் சார்பில் தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளிக்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jammu And Kashmir India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment