Advertisment

73வது சுதந்திர தின கொண்டாட்டம் - பிரதமர் மோடி முழு உரை இங்கே!

Independence Day 2019 PM Modi Speech: நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Independence day 2019 celebrations pm modi speech

Independence day 2019 celebrations pm modi speech

நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நேற்று இரவு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.

Advertisment

இந்நிலையில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று, தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அதன்பின்னர், பிரதமர் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார்.

இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார் மோடி. அதில், "நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது. காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.

மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும். 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு. இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்க முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

ஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக வணிகர்களின் நிம்மதியான வாழ்விற்கு, தடையாக இருந்த பல்வேறு சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது.

நமது படைகள் தான் நமது பெருமை. நமது முப்படைகளையும் மேலும் கூர்மையாக்க, இந்த செங்கோட்டையில் நான் மிக முக்கிய முடிவை அறிவிக்கிறேன். இந்தியாவுக்கு இனி முப்படைகளுக்கும் ஒரே தலைவர் (Chief of Defence Staff - CDS) தான். நமது படைகளை இந்த முறை மேலும் வலிமையாக்கப் போகிறது.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் இருந்து இந்தியாவை விடுவிப்போமா? புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் புதிய அறிமுகம் செய்யப்பட உள்ளது. "இந்தியாவில் தயாரிக்கப்படும்" பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர் உற்பத்தியையும், கிராமப்புற பொருளாதாரங்களையும் முன்னேற்ற முடியும்.

Narendra Modi Independence Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment