India Independence Day 2019 PM Modi Speech Updates: நாட்டின் 73வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் இல்லத்திலிருந்து செங்கோட்டை வரையிலான சாலைகளிலும், செங்கோட்டை சுற்றியுள்ள சாலைகளிலிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.
Prime Minister Shri @narendramodi will address the nation shortly. #IndependenceDayIndia #स्वतंत्रतादिवस https://t.co/heCcnEcaZb
— BJP LIVE (@BJPLive) August 15, 2019
இதே போல், அனைத்து மாநிலங்களில் முக்கிய நகரங்களிலும், எல்லையோரமும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி தொடர்ந்து 6வது முறையாக சுதந்திர தின உரையாற்றினார்.
சுதந்திர தினத்தன்று, துணை ராணுவப்படை, மத்திய ஆயுத போலீஸ் படை, மாநில போலீஸ் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வீர பதக்கங்களை வழங்கி கவுரவிக்கிறது. இந்தாண்டு 946 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
Live Blog
Independence Day UPDATES: பிரதமர் மோடி தொடர்ந்து 6வது முறையாக சுதந்திர தின உரை ஆற்றினார்
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றினார். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கபில் சிபல், பிஎஸ் ஹூடா, அஹ்மத் படேல், டாக்டர்.மன்மோகன் சிங் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
Congress President Smt. Sonia Gandhi hoists the national flag at AICC HQ on #IndependenceDay2019 pic.twitter.com/V61J13xEza
— Congress (@INCIndia) August 15, 2019
ஜம்மு & காஷ்மீர் 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு பிறகு, அங்கு முதன்முறையாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் ஆளுநர் சத்ய பால் மாலிக் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். இதனால், அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.
Jammu & Kashmir Governor Satya Pal Malik at Sher-i-Kashmir stadium in SRINAGAR: I assure the people of Jammu & Kashmir that their identity is not on the line, it hasn't been tampered with. The constitution of India allows different regional identities to flourish. https://t.co/SxjzfVvnWV
— ANI (@ANI) August 15, 2019
லடாக் தொகுதியின் பாஜக எம்.பி. ஜம்யங் செரிங் நம்க்யல், லே பகுதியில் நடந்த 73வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பொது நடனமாடிய காட்சி.
#WATCH BJP MP from Ladakh, Jamyang Tsering Namgyal (in front) dances while celebrating 73rd #IndiaIndependenceDay, in Leh. pic.twitter.com/KkcNoarPPB
— ANI (@ANI) August 15, 2019
"ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் இருந்து இந்தியாவை விடுவிப்போமா? புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் புதிய அறிமுகம் செய்யப்பட உள்ளது. "இந்தியாவில் தயாரிக்கப்படும்" பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர் உற்பத்தியையும், கிராமப்புற பொருளாதாரங்களையும் முன்னேற்ற முடியும்" - பிரதமர் மோடி
"நமது படைகள் தான் நமது பெருமை. நமது முப்படைகளையும் மேலும் கூர்மையாக்க, இந்த செங்கோட்டையில் நான் மிக முக்கிய முடிவை அறிவிக்கிறேன். இந்தியாவுக்கு இனி முப்படைகளுக்கும் ஒரே தலைவர் (Chief of Defence Staff - CDS) தான். நமது படைகளை இந்த முறை மேலும் வலிமையாக்கப் போகிறது" - பிரதமர் மோடி
ஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக வணிகர்களின் நிம்மதியான வாழ்விற்கு, தடையாக இருந்த பல்வேறு சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. சாலை, ரயில் நிலையங்களை அரசு நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது - பிரதமர் மோடி
தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார் மோடி. தனது சுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்.
'பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது' - பிரதமர் மோடி
"கடந்த 70 ஆண்டுகளாக 370-வது பிரிவு தீவிரவாதத்தை வளர்த்தது. ஆதிவாசிகளுக்கு மற்ற மாநிலங்களில் கிடைத்த உரிமைகள் அங்கு கிடைக்கவில்லை. 370, 35ஏ பிரிவினால் காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்கு பல தடைகள் இருந்தன. கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்களின் கனவுகள் நசுக்கப்பட்டு வந்தன, காஷ்மீரில் வசிக்க நினைப்பவர்களுக்கு போதிய உரிமைகள் கிடைக்கவில்லை" - பிரதமர் மோடி
"சுயமரியாதையுடன் கூடிய முன்னேற்ற பாதையில் நாடு சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் எனக்கு அளித்த கட்டளையை நிறைவேற்றி உள்ளேன், காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன" - பிரதமர் மோடி
"முத்தலாக் விவகாரத்தில் நாங்கள் மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். நாங்கள் எப்போதும் எங்கள் இஸ்லாமிய சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் குறித்து நினைத்துப் பார்ப்போம். உடன் கட்டை ஏறுதலை நாம் நீக்கும் பொழுது, நாம் பெண்களுக்கான சம உரிமை குறித்து சிந்திக்கும் போது, ஏன் நமது இஸ்லாமிய பெண்களுக்காக முத்தலாக்கை ரத்து செய்யக் கூடாது" - பிரதமர் மோடி
"நான் 2014ல் பதவி ஏற்ற போது, நாட்டில் ஏதாவது மாற்றம் நடக்குமா? என்று மக்கள் எண்ணினர். ஆனால், நமது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பல விஷயங்களை மாற்றியது. 2013-14 தேர்தலுக்கு முன்பு, நான் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றேன், அங்குள்ள மக்களின் உணர்வுகள் என்னவென்பதை அறிய. ஒவ்வொருவர் முகத்திலும் அதிருப்தி தெரிந்தது, "இந்த நாட்டுக்கு ஒரு மாற்றம் ஏற்படாதா?" என்று. - பிரதமர் மோடி
"இன்று, நான் சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் நமது குடிமக்களில் பலர் வெள்ளத்தால் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாம் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்" - பிரதமர் மோடி
"புதிய அரசு பதவியேற்ற 10 வாரங்கள் கூட முடியாத நிலையில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம்" என்று பிரதமர் மோடி தெரிவித்திள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளதாவது, "ஒரு சுதந்திர தேசமாக 72 ஆண்டுகளை கடந்துவிட்டோம். தற்போது 73வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்தநேரத்தில், நாட்டின் விடுதலைக்காக, தனது இன்னுயிரை தியாகம் செய்த அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். இன்னும் சில நாட்களில், (அக்டோபர் 2) நமது தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாட உள்ளோம். நாம் என்றும் காந்தியின் அகிம்சை வழியிலேயே பயணிக்கின்றோம்.
சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவின் 550வது பிறந்தநாள் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அவரது கோட்பாடுகள், எல்லா மதத்தினரும் பின்பற்றும் வகையில் பொதுவானதாக உள்ளது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிகழ்ந்த மாற்றங்கள், அப்பகுதி மக்களின் வாழ்க்கைக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் உள்ளது" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights