Advertisment

Independence Day 2022 Highlights: வீடுகளில் தேசியக்கொடி ஏற்றியவர்கள்; ‘ஹர் கர் திரங்கா’ இணையதளத்தில் 5 கோடி செல்ஃபி

Independence Day 2022: சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் எல்லா செய்திகளையும் உடனுக்குடன் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Independence Day 2022 Highlights: வீடுகளில் தேசியக்கொடி  ஏற்றியவர்கள்; ‘ஹர் கர் திரங்கா’ இணையதளத்தில் 5 கோடி செல்ஃபி

Independence Day 2022 Flag Hoisting Telecast: சுதந்திர தினம் கொண்டாடப்படுவதன் ஒரு அங்கமாக  டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றினார்.

Advertisment

இந்நிலையில் காலையிலேயே பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமர் கொடியேற்றியதும், தேசிய கீதம் பாடப்படும்போது, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இது பிரிட்டீஷ் காலத்திலிருந்து பின்பற்றபட்ட வழக்கமாகும்.

செங்கோட்டையின் இரண்டு நுழைவாயிலிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திர தினம் குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறுகையில் “உலகிற்கே ஜனநாயகத்தின் ஆற்றலை கற்றுக்கொடுத்தது இந்தியாதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil  



  • 22:25 (IST) 15 Aug 2022
    ‘ஹர் கர் திரங்கா’ என்ற இணையதளத்தில் 5 கோடி செல்ஃபி

    வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி எடுக்கப்பட்ட 5 கோடி செல்ஃபிக்கள், அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து ‘ஹர் கர் திரங்கா’ என்ற இணயதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.



  • 20:48 (IST) 15 Aug 2022
    திருவான்மியூர் பூங்காவிற்கு ‘இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா’ என பெயர் சூட்டினார் ஸ்டாலின்

    சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள பூங்காவிற்கு ‘இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

    ரூ.18.71 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.



  • 20:23 (IST) 15 Aug 2022
    ஆளுநரின் தேநீர் விருந்தில் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட ஸ்டாலின் - ஓபிஎஸ்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு, மரபுப்படி ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதில், ஓ.பி.எஸ் கலந்துகொண்டார். ஆனால், இ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை.

    ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில், முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஓ. பன்னீர்செல்வமும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் வணக்கம் சொல்லி வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்.



  • 19:32 (IST) 15 Aug 2022
    கர்நாடகாவில் மூவர் கைது

    காங்கிரஸ் நிறுவிய திப்பு சுல்தான் போஸ்டரை கிழித்து சேதப்படுத்தியதாக 3 பேரை கர்நாடக போலீசார் கைதுசெய்தனர்.



  • 19:27 (IST) 15 Aug 2022
    குடும்ப அரசியலை ஒழிக்க பாடுபடுவோம்- அண்ணாமலை

    தமிழ்நாட்டில் குடும்ப அரசியலை ஒழிக்க பாடுபடுவோம் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.



  • 19:08 (IST) 15 Aug 2022
    தேநீர் விருந்தை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி

    நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.



  • 18:33 (IST) 15 Aug 2022
    அரசியலுக்காக தேசப்பற்றை இழுக்காதீர்: பழனிவேல் தியாகராஜன்

    “அரசியலுக்காக தேசப்பற்று மற்றும் இராணுவத்தை இழுக்கக் கூடாது. ஏற்கனவே ஒரு கட்சி மதத்தை இழுந்துள்ளது. நாட்டின் ஜனநாயகம் கடந்த 75 ஆண்டுகளாக வலிமையாக உள்ளது” என தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.



  • 18:01 (IST) 15 Aug 2022
    ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

    ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டியலின சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ பனசந்த் மேக்வால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

    இவர் பாரன் மாவட்டத்தில் உள்ள அட்ரூ தொகுதியை சேர்ந்தவர். இது குறித்து பனசந்த் மேக்வால் கூறுகையில், “ ஜலூரில் 9 வயது பட்டியலின சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது என்னை ஆழமாக காயப்படுத்தியுள்ளது. பட்டியலின மக்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற சித்ரவதைகளை அனுபவித்துவருகின்றனர். என் ராஜினாமாவை தாக்கல் செய்துள்ளேன்” என்றார்.



  • 17:35 (IST) 15 Aug 2022
    கனல் கண்ணனுக்கு நீதிமன்ற காவல்

    ஸ்ரீரங்கத்தின் கோவில் முன்னால் உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீpதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.



  • 17:05 (IST) 15 Aug 2022
    ஆளுநர் தேநீர் விருந்து

    நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார்.



  • 16:37 (IST) 15 Aug 2022
    பெண்களுக்கு கண்ணியம், இந்தியாவின் பெருமை; மோடி சுதந்திர தின உரை ஹைலைட்ஸ்

    75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி உரையாற்றிய பிரதமர் மோடி பெண்களுக்கு கண்ணியம், இந்திய வேர்களில் பெருமை என்பதை அடிக்கோட்டு காட்டினார்



  • 16:05 (IST) 15 Aug 2022
    இந்தியா - வங்கதேசம் பாதுகாப்புப்படை வீரர்கள் இனிப்புகள் பரிமாற்றம்

    75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புல்பாரி எல்லையில் இந்தியா - வங்கதேசம் பாதுகாப்புப்படை வீரர்கள் இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்!



  • 15:28 (IST) 15 Aug 2022
    கருணாநிதி பெற்றுத்தந்த உரிமையோடு சுதந்திர தினத்தில் கொடியேற்றி உள்ளேன்- மு.க.ஸ்டாலின் ட்வீட்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி பெற்றுத்தந்த உரிமையோடு சுதந்திர தினத்தில் தேசியக் கொடியேற்றி உள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்



  • 15:27 (IST) 15 Aug 2022
    தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றினார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்

    சென்னை, கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடி ஏற்றினார்



  • 15:01 (IST) 15 Aug 2022
    கருணாநிதி பெற்றுத்தந்த உரிமையோடு சுதந்திர தினத்தில் கொடியேற்றி உள்ளேன்- மு.க.ஸ்டாலின் ட்வீட்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி பெற்றுத்தந்த உரிமையோடு சுதந்திர தினத்தில் தேசியக் கொடியேற்றி உள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட் செய்துள்ளார்.



  • 14:54 (IST) 15 Aug 2022
    முப்படைகள் சூழ இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றினார் ராஜ்நாத் சிங்

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகள் சூழ இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றினார்



  • 14:10 (IST) 15 Aug 2022
    நாட்டை நேசிக்கிறேன், அரசை அல்ல- பிசி ஸ்ரீராம்

    பிரபல ஒளிபதிவாளர் பிசி ஸ்ரீராம் ட்விட்டரில், “நாட்டை நேசிக்கிறேன் ஆனால் அரசை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.



  • 13:31 (IST) 15 Aug 2022
    அண்ணல் காந்தியடிகள் சிலை திறப்பு

    நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அண்ணல் காந்தியடிகளின் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.



  • 12:59 (IST) 15 Aug 2022
    நடனமாடிய மம்தா பானர்ஜி

    நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நாட்டுப்புற நடனம் நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாட்டுப்புற கலைஞர்களுடன் கலைஞராக நடனம் ஆடினார்.



  • 12:56 (IST) 15 Aug 2022
    தேசியக் கொடி ஏற்றிய ஜெ தீபா

    மறைந்த முனனாள் முதலமைச்சர் ஜெயலலிதவின் போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெ. தீபா மற்றும் மாதவன் ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினர்.



  • 12:30 (IST) 15 Aug 2022
    தேசிய கொடியேற்றினார் அமைச்சர் அன்பில் மகேஷ்

    நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் அன்பில் மகேஷ் தேசிய கொடி ஏற்றினார்.



  • 12:03 (IST) 15 Aug 2022
    சிறந்த பேரூராட்சி விருது

    தமிழகத்தில் சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு ரூ. 10 லட்சத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.



  • 12:02 (IST) 15 Aug 2022
    சிறந்த நகராட்சி விருதுகள்

    தமிழகத்தின் 2வது சிறந்த நகராட்சியான குடியாத்தம் நகராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் பரிசு, 3வது சிறந்த நகராட்சியான தென்காசி நகராட்சிக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.



  • 11:17 (IST) 15 Aug 2022
    அப்துல்கலாம் விருது

    பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி, சவேரியார் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ச. இஞ்ஞாசிமுத்துக்கு, டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.



  • 11:16 (IST) 15 Aug 2022
    கல்பனா சாவ்லா விருது

    நாகையை சேர்ந்த எழிலரசிக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்



  • 11:14 (IST) 15 Aug 2022
    சிறந்த நகராட்சி விருதுகள்

    தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக தேர்வான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு, முதல்வர் ஸ்டாலின் ரூ. 15 லட்சம் பரிசு வழங்கினார்.



  • 10:45 (IST) 15 Aug 2022
    சிறந்த மாநகராட்சி விருது

    தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான விருது சேலம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.



  • 10:35 (IST) 15 Aug 2022
    புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த ஸ்டாலின்

    சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி

    புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்



  • 10:19 (IST) 15 Aug 2022
    காந்தி சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    75வது சுதந்திர தினத்தையொட்டி காந்தி உருவச்சிலை திறப்பு



  • 10:07 (IST) 15 Aug 2022
    பரிசுத் தொகை 10 லட்சத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய நல்லக்கண்ணு!

    கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது, பரிசுத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

    பரிசுத் தொகை 10 லட்சத்துடன் கூடுதலாக 5000 சேர்த்து 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக முதல்வர் நிவாரண நிதிக்கு நல்லக்கண்ணு வழங்கினார்



  • 09:49 (IST) 15 Aug 2022
    தகைசால் தமிழர் விருதை நல்லகண்ணுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

    கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது, பரிசுத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

    பரிசுத் தொகையான ரூ.10 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார் நல்லகண்ணு.



  • 09:41 (IST) 15 Aug 2022
    சென்னையில் விடுதலை நாள் அருங்காட்சியகம்

    விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்



  • 09:40 (IST) 15 Aug 2022
    அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் ஸ்டாலின்

    அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்வு.

    1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்

    அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் - முதல்வர்



  • 09:19 (IST) 15 Aug 2022
    சுதந்திர தினம் - முதல்வர் ஸ்டாலின் உரை

    சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு எனது வீர வணக்கம். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது.

    மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்த கருணாநிதியை நினைவு கூர்கிறேன் என்றார்.



  • 09:14 (IST) 15 Aug 2022
    தேசியக் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

    சென்னை, கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்

    காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஸ்டாலின்



  • 09:05 (IST) 15 Aug 2022
    சுதந்திர தின விழா - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

    செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம். காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. உழைப்பாளா் சிலை முதல் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையும், கொடி மரச்சாலையிலும் அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.



  • 08:53 (IST) 15 Aug 2022
    பெண்கள் முன்னேறி வருகின்றனர் - மோடி

    விளையாட்டு, நீதித்துறை, ராணுவம் என பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேறி வருகின்றனர்.

    அடுத்த 25 ஆண்டுகளில் பெண்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். பெண்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதை உறுதி செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.



  • 08:47 (IST) 15 Aug 2022
    சுதந்திர தினம் - பிரதமர் உரை

    இந்திய வரலாற்றில் அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமானது. அடுத்த 25 ஆண்டுகளில் அடிமைத்தனத்திற்கான தடைகளை வெளியேற்ற வேண்டும் - பிரதமர் மோடி



  • 08:45 (IST) 15 Aug 2022
    மகன், மகள்களை சமமாக நடத்தப்பட வேண்டும் - மோடி

    இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்த ஒற்றுமையை உறுதிப்படுத்த பாலின சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். மகள்களையும், மகன்களையும் சமமாக நடத்தாவிட்டால், ஒற்றுமை இருக்காது.



  • 08:38 (IST) 15 Aug 2022
    'உலக பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்வு காண்கிறது'

    உங்களில் ஒருவனாக இருந்து நான் பெற்ற அனுபவங்களை உபயோகப்படுத்தி வருகிறேன்.

    200 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.

    உலக பிரச்சினைகளுக்கு இன்று இந்தியா தீர்வு காண்கிறது.



  • 08:36 (IST) 15 Aug 2022
    சுதந்திர தினம் - பிரதமர் மோடி உரை

    தீவிரவாதம், இயற்கை பேரிடர் உள்ளிட்ட முரண்பாடுகளை கடந்து இந்தியா முன்னேறி வருகிறது.

    ஒட்டுமொத்த உலகமும் இன்று இந்தியாவை பார்க்கும் விதம் மாறி உள்ளது.

    ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர் - பிரதமர்.



  • 07:50 (IST) 15 Aug 2022
    காந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

    பிரதமர் மோடி சிவாக்கு கோட்டையில் தனது பேச்சை தொடங்கும் முன், காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.



Independence Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment