உ.பி.யில் கோலாகலமாக தொடங்கிய சுதந்திர யாத்திரை; ‘பிரியங்கா எங்கே?’ காங்கிரஸார் கேள்வி

முஹரம் பண்டிகை காரணமாக முதல் நாள் யாத்திரைக்கான வரவேற்பு குறைவாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை யாத்திரையில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Tiranga, national flag, Azadi ki Gaurav Yatra, priyanka gandhi, congress yatra, Uttar pradesh, Sonia Gandhi, பிரியங்கா காந்தி, காங்கிரஸ், உத்தரப் பிரதேசம், சுதந்திர யாத்திரை, Rahul gandhi, for strong opposition, All India Congress Committee (AICC), political pulse, indian express political news

முஹரம் பண்டிகை காரணமாக முதல் நாள் யாத்திரைக்கான வரவேற்பு குறைவாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை யாத்திரையில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின், ‘ஆசாதி கி கௌரவ் யாத்ரா’ செவ்வாய்க்கிழமை மந்தமாகத் தொடங்கியது. இது காங்கிரஸ் கட்சி – தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்கு பிறகு, பலவீனமடைந்து, அக்கட்சி உத்தரப் பிரதேச மாநிலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விளக்குகிறது. சுதந்திர தினத்திற்கு முந்தைய வாரத்தைக் குறிக்கும் வகையில், இந்த யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சூடான பதிலைப் பெற்றுள்ளது. ஆனால், உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு மிகவும் கவலையளிப்பது என்னவென்றால், புதன்கிழமை கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்த பிரியங்கா காந்தி வத்ரா இல்லாததுதான் கவலை அளிப்பதாக உள்ளது.

முஹரம் பண்டிகை என்பதால் முதல் நாள் யாத்திரைக்கான வரவேற்பு குறைவாக இருந்ததாகக் கூறிய காங்கிரஸ் தலைவர்கள், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முன்னதாக யாத்திரைக்கான வரவேற்பு அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். தேர்தலுக்கு முன்பு பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு பொறுப்பேற்று, அவர்களை முன்னணியில் இருந்து வழிநடத்தி வந்தார். ஆனால், இப்போது மாநிலத்தில் இருந்து அவர் இருந்து தானாகவே விலகிவிட்டார். தேர்தலுக்கு முன்னதாக, கட்சியை முன்னிலைப்படுத்த பிரியங்கா பெரிய அல்லது சிறிய நிகழ்ச்சிகளுக்குகூட கவனம் அளித்து வந்தார். ஆனால், அவர் இப்போது சுதந்திர யாத்திரையில் காணவில்லை. இந்த நேரத்தில், அரசியல் நிகழ்வுகள் குறித்த காங்கிரஸ் கட்சியின் எதிர்வினைகள், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி பிரமோத் திவாரி, நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் அல்லது ஏ.ஐ.சி.சி செயலாளர்கள் ஆகியோரிடமிருந்து வருகின்றன.

மேலும், அஜய் குமார் லல்லு மார்ச் மாதம் ராஜினாமா செய்ததில் இருந்து உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸுக்கு தலைவர் இல்லாததால், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைவதற்கான எல்ல முயற்சியும் தடைபட்டுள்ளது. காங்கிரஸ் அமைப்பை 6 மண்டலங்களாகப் பிரித்து, மாநிலத் தலைவரை நியமிப்பது குறித்து பரிசீலிப்பது குறித்து காங்கிரஸ் தலைமை பேசியிருந்தாலும், தற்போதைய அமைப்பு மற்றும் சூழ்நிலையைப் பொறுத்தவரை, பெரும்பாலான மூத்த தலைவர்கள் அத்தகைய பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த மாதம் மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் பாஜக கொடிகள் கண்டெடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டதை படம்பிடித்து அனுப்புமாறு டெல்லியில் உள்ள தலைவர்கள் லக்னோவில் உள்ள ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டதாக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால், அந்த வீடியோ லீக் ஆனது.

“உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸை வழிநடத்தும் மூத்த தலைவர்களுக்கு பஞ்சமில்லை, ஆனால், பிரச்சனை என்னவென்றால், அரசியல் சார்பற்றவர்களின் குழுவின் கீழ் வேலை செய்ய வைக்கப்பட்டு, மாநிலத் தலைவர் பதவியை இழக்காமல் போன அஜய் குமார் லல்லுவின் அனுபவத்தையும் விதியையும் பார்த்துள்ளார்கள். ஆனால், அவரது அரசியல் வாழ்க்கையிலும், பெரும்பாலான மூத்த தலைவர்கள் பொறுப்பை ஏற்பதற்கான நிபந்தனைகளை வைத்துள்ளனர். நாங்கள் அதிகாரப் படிநிலையைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அது ஒரு அரசியலாக இருக்க வேண்டும்,” என்று ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் கூறினார்.

பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறிய மற்றொரு மூத்த தலைவர், “கட்சி விரும்பினால் எந்த முறையையும் பரிசோதிக்கலாம். ஆனால், கடந்த கால அனுபவங்களைப் பார்த்தால் பிரச்சனை. அரசியல் அல்லாதவர்களின் கீழ் பணியாற்றுவது கடினம். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் மாநில தலைவர்களுக்கு இடையேயான முதல் தடையாக இருக்கும். கட்சிக்காக உயிரைக் கொடுத்த எங்களைப் போன்றவர்களுக்கு, இதுபோன்ற அமைப்பில் பணியாற்றுவது கடினம். எனவே, இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும்” என்று கூறினார்.

மற்றொரு, உ.பி காங்கிரஸ் நிர்வாகி கூறுகையில், கட்சியின் தற்போதைய நிலைமைக்கு தற்போதுள்ள அமைப்பைக் குற்றம் சாட்டுவதன் மூலம் தலைமை மாற்றத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, கட்சி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதுதான் விஷயம். நாங்கள் அமேதியைக்கூட இழந்தோம். பின்னர், பஞ்சாயத்து தேர்தலின் போது, ​​முதன்முறையாக கட்சி ஆதரித்த வேட்பாளர்களுக்கு செலவு செய்தது. ஆனால், இன்னும் செயல்பட முடியவில்லை, பின்னர், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் முன்னால் இருக்கிறது” என்று கூறினார்.

உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர்கள் சிலர், உயர் மட்டத் தலைவர்களிடம் பேச முயற்சி செய்ததாகவும் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். மற்றவர்கள், தங்கள் கவலையை கட்சித் தலைமையிடம் கூட சொல்லமுடியவில்லை என்றார்கள். மற்ற கட்சிகளில் இருந்து இணைந்த சிலருக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியும் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே இருப்பவர்கள் தெரிவித்தனர்.

“காங்கிரஸ் கட்சியின் தோல்விகளுக்கு தொண்டர்கள் பொறுப்பேற்க முடியாது. எங்களில் பெரும்பாலானோர் இப்போது விரக்தியாக உணர்கிறோம். உ.பி. அணி உருவாகும் என, அவ்வப்போது கேள்விப்பட்டு வருகிறோம். கடைசியாக ஆகஸ்ட் 2ம் தேதி பட்டியல் வெளியிடப்படும் என்று கேள்விப்பட்டோம். ஆனால், ஆகஸ்ட் 2ம் தேதியும் போய்விட்டது. மக்கள் முட்டாள்கள் அல்ல, தேர்தலையொட்டி மட்டுமே எங்களால் செயல்பட முடியாது” என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார்,
“காங்கிரஸ் அல்லாத பின்னணி” கொண்ட ஒரு தலைவரை மாநிலத்தில் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்தால் ராஜினாமா செய்வேன்” என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Independence yatra off to tepid start in up congress men asks where is priyanka

Exit mobile version