இந்தியாவில் எலெக்டோரல் பாண்ட் (தேர்தல் பத்திரங்கள்) திட்டம் ஜனவரி 2018 இல் தொடங்கப்பட்டது. இதில் முதல் தவணை விற்பனை அந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா 10 நாட்களுக்கும், மக்களவைத் தேர்தலுடன் ஒரு வருடத்திற்கு கூடுதலாக 30 நாட்களுக்கும் விற்பனை நடைபெறும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது. நவம்பர் 2022 இல், நிதி அமைச்சகம் அனைத்து சட்டமன்ற தேர்தலுக்கும் மேலும் 15 நாட்கள் விற்பனையை அனுமதிக்கும் திட்டத்தைத் கொண்டு வந்தது.
தேர்தல் பத்திரங்களை மீட்டெடுக்க, ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட 29 எஸ்பிஐ கிளைகளில் ஒன்றில் நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்கை வைத்திருக்க வேண்டும் மற்றும் ஒரு கணக்கைத் திறக்க, கட்சி சமீபத்திய மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 1% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும், அல்லது மாநில கட்சியாக இருந்தால் சட்டமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்..
இந்நிலையில் அரசியல் நிதியின் அதிகரிப்பை சுட்டிக்காட்டி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புது தில்லி மற்றும் சென்னை ஆகிய ஐந்து நகரங்கள் இதுவரை விற்கப்பட்ட அனைத்து தேர்தல் பத்திரங்களில் கிட்டத்தட்ட 90% பங்கைக் வைத்திருக்கும் நிலையில், இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரு இதில் வெறும் 2% பங்கை மட்டுமே பெற்றுள்ளது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கியை அணுகியது. இதற்காக மே 4 அன்று, எஸ்.பி.ஐ வழங்கிய தரவுகளின்படி 2018 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடங்கியதில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வரை ரூ.12,979.10 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.
அதே காலகட்டத்தில், அரசியல் கட்சிகளால் ரூ.12,955.26 கோடி தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. இந்திய குடிமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அநாமதேய அரசியல் நிதியுதவியை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த பத்திரங்களை மீட்டெடுக்க 25 அரசியல் கட்சிகள் வங்கியில் நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைத் திறந்ததாக ஆர்டிஐ (RTI) விண்ணப்பத்திற்கு எஸ்.பி.ஐ (SBI) பதில் அளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல், பல்வேறு காரணங்களுக்காக இந்தத் திட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது குறித்து நீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை. இதனிடையே நீதிமன்றத்தின் தானியங்கி பட்டியல் முறையின்படி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 9 ஆம் தேதி நடைபெற உள்ளது,
இந்நிலையில், நாட்டின் நிதித் தலைநகரான மும்பை, இதுவரை விற்கப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களில் 26.16% பங்கை பெற்றுள்ளது., இந்தத் திட்டம் வழங்கப்படும் 29 எஸ்.பி.ஐ வங்கி கிளைகளில் அதிகபட்சமாக ரூ.3,395.15 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் கொல்கத்தா ரூ.2,418.81 கோடி (18.64%);, ஹைதராபாத் ரூ.1,847 கோடி (14.23%);, புது தில்லி ரூ.1,253.20 கோடி (9.66%).மற்றும் சென்னை ரூ.2,704.62 கோடி (20.84%) ஆகிய நகரங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தன;
அடுத்து தேர்தல் நடைபெறும் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு ரூ.266.90 கோடி விற்பனையுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த மதிப்பு நாட்டில் தேர்தல் பத்திரங்கள் மொத்த விற்பனையில் 2.06%, ஆகும். ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வருக்கு அடுத்தபடியாக (ரூ.407.26 கோடி 3.14%’) அடுத்து பெங்களூர் உள்ளது.
முக்கியமாக ஐந்து பெரிய நகரங்களில் இருந்து கட்சிகளுக்கு நிதி கிடைத்து வருகிறது என்று விற்பனைத் தரவு காட்டினாலும், தேர்தல் பத்திரங்களை மீட்பதற்கு வரும்போது, எஸ்.பி.ஐ.யின் புது தில்லி கிளைதான் விருப்பமான தேர்வாக உள்ளது. இதுவரை மீட்டெடுக்கப்பட்ட மொத்த பத்திரங்களில், தேசிய கட்சிகள் 64.55% சதவீதம் ரூ. 8,362.84 கோடி பணத்தை தங்கள் கணக்குகளை வைத்திருக்கும் புது தில்லி எஸ்பிஐ வங்கி கிளையில் பணமாக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத் 12.37% (ரூ.1,602.19 கோடி) பெற்று இரண்டாவது இடத்தையும், கொல்கத்தா 10.01% (1,297.44 கோடி), புவனேஸ்வர் 5.96% (ரூ. 771.50 கோடி) சென்னை 5.11% (ரூ.662.55 கோடி) உடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மும்பை மொத்த விற்பனையில் 26% க்கும் அதிகமாக இருந்தாலும், மொத்த தேர்தல் பத்திரங்களில் 1.51% மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“