Shubhajit Roy
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அக்டோபர் 20ம் தேதி ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைத்த அழைப்பை ஏற்றுள்ளது இந்தியா.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்களையும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்யா அழைத்துள்ளது. இது இந்தியாவை நேரடியாக அணுக தாலிபான்களுக்கு வழி வகுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், இந்தியாவுக்கான அதிகாரியை வெளியேற்றி அறிவித்தது தாலிபான்.
இந்தியாவின் பங்கேற்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி ”அக்டோபர் 20ம் தேதி அன்று ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை ரஷ்யா அழைத்துள்ளது. இதில் நாம் பங்கேற்க உள்ளோம்” என்று அறிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளருக்கு நிகரான பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் இது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படவில்லை.
கடந்த வாரம் ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புதினின், ஆப்கானிஸ்தானிற்கான சிறப்பு பிரதிநிதி ஜமிர் கபுலோவ், ஆப்கானிஸ்தான் தொடர்பாக அக்டோபர் 20 அன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தாலிபான் பிரதிநிதிகளையும் பங்கேற்க அழைத்துள்ளோம் என்று கூறினார்.
ஜி20 மாநாடு அக்டோபர் 12ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது அதிகார மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான பேரிழவுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் மீளும் பொருட்டு உதவுவதற்காக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாத இறுதியில் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது மாஸ்கோவில் நடைபெற இருக்கும் இந்த பேச்சுவார்த்தை இரண்டாம் பேச்சுவார்த்தை என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் காபூலை ஆப்கானியர்களை கைப்பற்றிய பிறகு தாலிபான்களின் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் பெண்கள், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து உருவாகும் தீவிரவாத இயக்கங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பியது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச மாநாடு ஒன்றை ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து மாஸ்கோ நடத்தியது. அதில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் ஆப்கானிஸ்தான் தரப்பு அமைதி ஒப்பந்தத்தை அடைய அழைப்பு விடுவிக்கப்பட்டது.
அந்த அறிக்கை தலிபான்களை வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் படைகளை வாபஸ் பெறத் தொடங்கிய பிறகு, தலிபான்கள் மின்னல் வேகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அது அஷ்ரஃப் கானியின் அரசின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.
பரந்த பிராந்தியத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து ரஷ்யா கவலை கொண்டுள்ளது. மாஸ்கோ தலிபான்களை ஈடுபடுத்த முடிவு செய்தது. ஆனாலும் ரஷ்யாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட குழுவிற்கு அங்கீகாரம் வழங்குவதை நிறுத்திவிட்டது. ஆப்கானிஸ்தானை காபூல் கைப்பற்றிய பிறகு, பிற நாட்டு தூதரகங்கள் முழுமையாக வெளியேறிய நிலையில், ரஷ்யா மட்டும் தொடர்ந்து தங்களின் தூதரகத்தை திறந்தே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.