ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisment
ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே அதிகரித்து வரும் போர்ச்சூழலால், இரு நாடுகளும் எல்லை பகுதியில் ராணுவத்தை குவித்து வைத்துள்ளன. உக்ரைன் எல்லைகளில் 1 லட்சத்திலிருந்து மேற்பட்ட ரஷ்ய படைகள் உள்ளன.
ஆனால், உக்ரைனைக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்ததார்.
Advertisment
Advertisements
ரஷ்யா எந்நேரத்திலும் வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதால், ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் தங்கள் மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்ற துவங்கி உள்ளனர்.
அந்த வரிசையில், உக்ரைனில் நாட்டில் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைனில் நிலவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால், அங்குப் படிப்பதற்காகச் சென்றிருக்கும் மாணவர்கள் தற்காலிகமாக உக்ரைனிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனர். இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைனுக்கு செல்ல வேண்டாம்
மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றியும் நிலை குறித்தும் தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். அப்போதுதான், அவசர சூழ்நிலையில் உங்களை எளிதாக தொடர்புகொள்ள முடியும். உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்க தூதரகம் தொடர்ந்து செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ரஷ்யா கிய்வ் மீது படையெடுக்கலாம் என்ற கவலைக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மாஸ்கோ மறுத்தாலும், உக்ரைன் எல்லைக்கு அருகே புதினின் படைகள் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் மேல் உள்ளது.
முன்னதாக, உக்ரைனில் உள்ள தனது தூதரகத்தை மூடிவிட்டு, போலந்து எல்லைக்கு அருகிலுள்ள நகரத்திற்கு ஊழியர்களை மாற்றுவதாக அமெரிக்கா அறிவித்தது. மேலும், உக்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு பல எச்சரிக்கைகளையும் விடுத்தது. உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும்.மாறாக தங்க விரும்பினால் தூதரகத்தில் முறையாக பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil