Advertisment

'மாலத்தீவில் இருந்து ராணுவ வீரர்களை வாபஸ் பெற இந்தியா ஒப்புதல்': அதிபர் முகமது முய்ஸு

மாலத்தீவில் இருந்து ராணுவ வீரர்களை வாபஸ் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக அதிபர் முகமது முய்ஸு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
India agrees to pull out soldiers from Maldives President Mohamed Muizzu Tamil News

முகமது முய்ஸு தனது மாலத்தீவு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் "இந்தியா ஃபர்ஸ்ட்" கொள்கை மாற்றம் செய்யப்படும் என்றும், 77 இந்திய ராணுவ வீரர்களை தீவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

maldives: இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்ஸு வெற்றி பெற்றார். அவர் மாலத்தீவு அதிபராகச் சமீபத்தில் பதவியேற்ற நிலையில், பதவியேற்ற ஒரு நாளுக்குப் பிறகு,புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு அவரைச் சந்தித்தார். 

Advertisment

அப்போது அதிபர் முகமது முய்ஸு, மாலத்தீவில் தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்திய அரசாங்கத்திடம் முறைப்படி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், மாலத்தீவில் இருந்து ராணுவ வீரர்களை வாபஸ் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக அதிபர் முகமது முய்ஸு நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: India agrees to pull out soldiers from Maldives, says Muizzu

இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, துபாயில் அதிபர் முகமது முய்ஸு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். மேலும் இந்திய ஹெலிகாப்டர்கள் மற்றும் செயல்பாட்டு விமானங்களை எவ்வாறு வைத்திருப்பது என்பது குறித்த விவாதங்கள் "தொடர்ந்து" மற்றும் "இரு தரப்பும் ஒப்புக்கொண்ட முக்கிய குழு" குறித்து சுருக்கமாக விவாதிக்கப்பட்டதாகவும், இதை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது பற்றிய விவரங்களை ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

"நாங்கள் நடத்திய கலந்துரையாடலில், இந்திய வீரர்களை திரும்பப் பெற இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க உயர்மட்டக் குழுவை அமைக்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்." என்று அதிபர் முகமது முய்ஸு மாலேயில் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாலத்தீவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானம் இந்தியாவால் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைக்கு (MNDF) அவசர மருத்துவ வெளியேற்றம் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த தளங்களை இயக்க 77 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர்.

முகமது முய்ஸு தனது மாலத்தீவு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் "இந்தியா ஃபர்ஸ்ட்" கொள்கை மாற்றம் செய்யப்படும் என்றும், 77 இந்திய ராணுவ வீரர்களை தீவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

இந்தியாவில் வெளிவிவகார அமைச்சகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ பதில் இல்லை என்றாலும், “மாலத்தீவில் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய தளங்களின் நிலை குறித்த அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். இந்திய தளங்களின் தொடர்ச்சியான பயன், விவாதங்களில் அங்கீகரிக்கப்பட்டதால், சரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும்.

இந்த தளங்களின் பயன்பாட்டை மாலத்தீவு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது. இது எங்கள் இருதரப்பு வளர்ச்சி கூட்டாண்மையின் ஒரு முக்கிய பகுதி என்பது இரு தரப்பாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

அவற்றை எவ்வாறு செயல்பட வைப்பது என்பது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. இரு தரப்பும் அமைக்க ஒப்புக்கொண்டுள்ள முக்கிய குழு இதை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது பற்றிய விவரங்களைப் பார்க்கும்." என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

துபாயில் மோடி-முய்ஸு சந்திப்புக்கு பிறகு இரு தரப்பினரும் ஒரு முக்கிய குழுவை உருவாக்க முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

maldives
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment