எதிர்க் கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு "மாநில வாரியாக " ஒருங்கிணைப்பாளர்கள் என்ற லாலு பிரசாத்தின் பரிந்துரை, பீகார் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு (JD(U)) பிடிக்கவில்லை.
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை மும்பையில் கூடும் குழுவில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் பங்கைப் பெறுவார் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அறியப்படுகிறது.
இதுகுறித்து ஒரு மூத்த JD(U) தலைவர் கூறுகையில்: “பல ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை அதிக அர்த்தமுள்ளதாக இல்லை, இருப்பினும் மாநில வாரியாக ஒருங்கிணைப்பாளர் இருப்பது நல்லது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இருந்தனர். ஆனால் பல ஒருங்கிணைப்பாளர்கள் நல்ல யோசனை அல்ல. லாலு பிரசாத் இந்தியா கூட்டணி கொள்கையின், முக்கியப் பகுதியைப் பற்றி ஒரு தலைப்பட்சமாக எப்படிப் பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை, என்றார்..
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த லாலு, “... வரவிருக்கும் இந்திய கூட்டத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி கொஞ்சம் யோசனை செய்திருக்கலாம். கூட்டணியில் உள்ள முன்னணி கட்சியான காங்கிரஸ், தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற யோசனைக்கு தயாராக இல்லை என்பது போல் தெரிகிறது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த லாலு, செவ்வாய்க்கிழமை கோபால்கஞ்சில் உள்ள தனது பூர்விக கிராமமான புல்வாரியாவுக்குச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
ஒருங்கிணைப்பாளரின் பங்கு குறித்து எந்த சர்ச்சையும் இல்லை. எவரும் இந்தியா கூட்டணியின் கன்வீனராகலாம்... X கன்வீனராக ஆக்கப்பட்டதாக வைத்துக்கொள்வோம். மற்ற கன்வீனர்களுக்கு, தலா நான்கு மாநிலங்கள் வழங்கப்படலாம். சிறந்த ஒருங்கிணைப்புக்கு மாநில வாரியாக கன்வீனர்களும் நியமிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில் டெல்லி பயணத்தின் போது, சில எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க நிதிஷ் குமார் முயன்றது தெரிந்ததே. ஆனால் அது நிறைவேறவில்லை.
இதற்கிடையில் பாஜகவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடத்திற்கு அவர் சென்றது சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை.
பாரதிய ஜனதா கட்சியுடன் நிதிஷின் பழைய தொடர்பைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக, ஐக்கிய ஜனதா தள தலைவரின் அழுத்தமான தந்திரமாக இதை பலர் பார்த்தனர்.
மகாகத்பந்தன் (MGB) வட்டாரம் கருத்துப்படி: “ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பு நிதிஷ் குமார் தனது சொந்த யாத்திரையை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் முன்னணியில் இருப்பதால், வேறு எந்தக் கட்சியின் தலைவருக்கும் முதலிடம் கொடுக்க காங்கிரஸ் உடன்படாமல் போகலாம்.
அதுமட்டுமின்றி, எதிர்கட்சியை சூடுபிடிக்கும் போது பாஜகவை யூகிக்க வைக்கும் நிதிஷின் இரட்டைப் பாதை அரசியல் பீகாரில் வேலை செய்ய முடியும், ஆனால் தேசிய அளவில் அல்ல.”
ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்துடன், பீகார் முதல்வர் முன்னிலையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முயற்சி தொடங்கியது. இரண்டாவது சந்திப்பு பெங்களூரில் ஜூலை 17 அன்று நடந்தது, இதில் 26 கட்சிகள் பங்கேற்றன.
அதற்குள், காங்கிரஸ் - சமீபத்தில் கர்நாடகாவில் வெற்றி பெற்றதன் மூலம் - கூட்டணியில் தலைமைப் பாத்திரத்தை ஏற்றது.
பெங்களூரில் இருந்து மீடியாக்களிடம் பேசாமல் திரும்பிய நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கான நடவடிக்கையை தொடங்கியவர் என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் மௌனம் சாதித்தார்.
மும்பையில் நடைபெறும் இரண்டு நாள், இந்தியா கூட்டணியின் கூட்டத்தில், உயர்மட்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது தவிர, திட்டங்கள், கொள்கைகள் மற்றும் கூட்டுப் பேரணிகள் ஆகியவை இருக்கும்.
இந்திய கூட்டணியின் உயர்மட்ட நிர்வாகிகள் பதவிகளுக்கான போட்டியாளர்களில் காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜுன் கார்கே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் எம் கே ஸ்டாலின், என்சிபி தலைவர் சரத் பவார் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.