எதிர்க்கட்சிகளின், “இந்தியா” கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் வியூகக் குழு இன்று முதல் முறையாக டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடியது.
இந்நிலையில், “12 எதிர்க்கட்சித் தலைவர்கள் கையொப்பமிட்ட கூட்டறிக்கையில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்சினையை எடுத்துக் கொள்ள கூட்டணி முடிவு செய்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, “நாடு முழுவதும் கூட்டணிக் கட்சிகள் கூட்டாக பொதுக் கூட்டங்களை நடத்துவது என்றும் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
மேலும், கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் போபாலில் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
INDIA Alliance Parties to begin seat-sharing discussion
முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கடுமையாக சாடிய பாஜக, இந்த பேச்சுவார்த்தையை "இந்து எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழு" என்று முத்திரை குத்தினர்.
இந்த நிலையில், இன்று விசாரணைக்கு அமலாக்க இயக்குனரகத்தால் (ED) அழைக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, புதன்கிழமை கூட்டத்தை புறக்கணித்தார்.
ஹேமந்த் சோரன் மற்றும் ஜேடி(யு) வின் லாலன் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவில்லை. பவாரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (திமுக), சஞ்சய் ராவத் (சிவசேனா - யுபிடி), தேஜஸ்வி யாதவ் (ஆர்ஜேடி), ராகவ் சத்தா (ஏஏபி), ஜாவேத் அலிகான் (எஸ்பி), சஞ்சய் ஜா ராஜா (சிபிஐ), உமர் அப்துல்லா (என்சி), மற்றும் மெகபூபா முஃப்தி (பிடிபி) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“