Advertisment

பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடக்கம்: 17 கேட்கும் ஜே.டி(யு), ஆர்.ஜே.டி; காங்கிரசுக்கு 4 பரிந்துரை

2019-ல் வெற்றி பெற்ற குறைந்தபட்ச 16 சிட்டிங் மக்களவைத் தொகுதிகளில் ஜே.டி(யு) கட்சி போட்டியிடும் என்று என நேற்று வெள்ளிக்கிழமை காங்கிரஸிடம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
INDIA Alliance seat sharing begins in Bihar JDU RJD want 17 each suggest 4 for Congress Tamil News

பீகாரில் தனது தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் 8 இடங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Bihar: 2024 மக்களவை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் 'இந்தியா கூட்டணி' என ஓரணியில் திரண்டுள்ளன. இந்நிலையில், இந்த கட்சிகளுக்கு இடையே தற்போது தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Advertisment

ஐக்கிய ஜனதா தளம் ஜேடி(யு) கட்சித் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமாருக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தொடர்ந்து முன்வைத்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி மாநிலத்தில் தொகுதிப் பங்கீட்டைத் தொடங்கியுள்ளது. 2019-ல் வெற்றி பெற்ற குறைந்தபட்ச 16 சிட்டிங் மக்களவைத் தொகுதிகளில் ஜே.டி(யு) கட்சி போட்டியிடும் என்று என நேற்று வெள்ளிக்கிழமை காங்கிரஸிடம் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பீகாரில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், தற்போது பீகாரில் ஜேடி(யு) கட்சிக்கு 16 இடங்களும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையில் என்.டி.ஏ கூட்டணியாகப் போட்டியிட்ட 2019 தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த கிஷன்கஞ்ச் - காங்கிரஸ் தொகுதியிலும் ஜே.டி(யு) உரிமை கோரியுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜே.டி.(யு) மூத்த தலைவர் ஒருவர் 17 இடங்களுக்கான கட்சியின் கோரிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவரிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். "ஜேடி(யு) 16 இடங்களில் வெற்றி பெற்று மற்றொரு இடத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மீதமுள்ள 23 இடங்களில் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தங்களின் பங்கை தீர்மானிக்க வேண்டும்” என்று ஜேடி(யு) தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமார் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசியுள்ள அந்தத் தலைவர் “அவரது பெயரில் காங்கிரஸுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்க வாய்ப்பில்லை. விரைவில் அழைப்பாளர் பெயர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது." என்று கூறினார். 

"ஜே.டி.(யு) காங்கிரஸிடம் நிதிஷை இந்தியா கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆக்க வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் இந்த யோசனையை ஆதரித்துள்ளனர். இது இப்போது ஒரு விஷயமாக இருக்க வேண்டும்." என்று மற்றொரு ஜேடி(யு) தலைவர் கூறினார். 

பீகாரில் தனது தளத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் 8 இடங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன. ஜேடி(யு) மற்றும் ஆர்.ஜே.டி கட்சிகள் 2015 சட்டமன்றத் தேர்தல் ஃபார்முலாவில் இரு கட்சிகளும் சமமான இடங்களில் போட்டியிட்ட அதே வேளையில் காங்கிரஸுக்கு கவுரவமான எண்ணிக்கையிலான இடங்களை வழங்குவதாகத் தெரிவித்துள்ளன. “இந்த முறை, நாம் சி.பி.ஐ(எம்எல்) மற்றும் சி.பி.ஐ-க்கும் இடமளிக்க வேண்டும். காங்கிரஸின் அடித்தளம் மாநிலத்தில் சுருங்கிவிட்டதால் நான்கு இடங்களுக்கு மேல் அழுத்தம் கொடுக்கக் கூடாது” என்று பாட்னாவில் உள்ள ஜே.டி(யு) வட்டாரம் தெரிவித்தது.

ஆர்ஜேடி தலைவர் ஒருவர் பேசுகையில், “ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி(யு)-வுக்கு தலா 17 இடங்களும், காங்கிரஸுக்கு நான்கு முதல் சி.பி.ஐ (எம்.எல்) -க்கு இரண்டு இடங்கள் என்பது நடைமுறை சூத்திரம். ஆர்ஜேடி  மற்றும் ஜே.டி(யு) உயர்மட்டத் தலைவர்கள் இன்னும் கொஞ்சம் ஒப்புக்கொண்டால், ஆர்ஜேடி  மற்றும் ஜே.டி(யு) -க்கு தலா 16 இடங்களும், காங்கிரஸுக்கு 5 இடங்களும், சி.பி.ஐ(எம்எல்)-க்கு இரண்டும் மற்றும் சி.பி.ஐ-க்கு ஒரு இடமும் கிடைக்கும்.

மற்றொரு ஜே.டி.(யு) தலைவர் பேசுகையில், "காங்கிரஸ், இந்திய கூட்டணியில் முன்னணி கட்சியாக இருப்பதால், நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் இடத்தை மதிக்க வேண்டும். பீகாரில் அதிக பங்கு இல்லை என்பது காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும். அக்கட்சி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் சிக்கியுள்ளது. அது வலுவாக இருக்கும் இடத்தில் புத்துயிர் பெற முயற்சிக்க வேண்டும். மாறாக மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் இடத்தில் அல்ல,” என்று அவர் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: INDIA bloc seat-sharing begins in Bihar, JD(U), RJD want 17 each, suggest 4 for Congress

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment