இந்தியா டூரிஸம் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் என்ற அறிவிப்பின் படி கடந்த வருடம் மட்டும் சுமார் 2 லட்சம் சீனர்களை வரவேற்றிருக்கிறது இந்தியா. சீனர்களுக்கு ஏன் இந்தியா அவ்வளவு பிடித்தமான நாடாக இருக்கிறது என்பது தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயின் முடிவுகள் இதோ.
சீனப் பயணிகளை கவரும் இந்தியா
இங்கு வரும் சீனர்கள் அதிகமாக மும்பைக்கும் டெல்லிக்கும் சுற்றுலா செல்கிறார்கள். மும்பை 69% பயணிகளையும் டெல்லி 51% சீனப் பயணிகளையும் ஈர்க்கிறது என hotels.com என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் Hotels.com சீனர்கள் மத்தியில் சர்வே ஒன்று எடுத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வெளிநாடு சென்றவர்களில் 3047 பேர்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்தியா டூரிஸம் மேற்கோள் காட்டும் காரணங்கள்
படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை பார்த்து அதில் வரும் இந்திய பகுதிகளை பார்வையிடுவதற்காகவே சீனாவில் இருந்து இந்தியாவிற்கு சீனர்கள் படையெடுத்து வருகிறார்கள்.
அப்படி வருகிறவர்கள் காண அதிகம் விரும்புவது தாஜ்மஹாலைத் தான். அதற்கு அவர்கள் கூறும் காரணமெல்லாம் அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நடிகர்கள் தாஜ்மஹாலில் படப்பிடிப்பதற்கு வருவதால் தானாம்.
சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படும் தகவல்களின் அடிப்படையிலும் இந்தியாவிற்கு அவர்கள் பயணம் செய்ய விரும்புகிறார்கள். டிஜிட்டல் உலகில் அடியெடுத்து வைக்கும் மூன்றாம் தலைமுறையினருடன் அவர்களின் தாத்தக்களும் பாட்டிகளும் கூட இந்தியா வருவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிவிட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இங்கு வரும் சீனர்கள் சமூக வலைதளங்களில் எடுத்துப் போடும் செல்ஃபிக்கள் தான் இதற்கு முக்கியமான காரணம். இந்தியாவில் இருக்கும் மிக அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு வருகை புரிதலையும், மிகவும் ருசியான உணவுகளை சுவைப்பதையும், உள்ளூர் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறுவதையும் செல்ஃபிக்களாக எடுத்துப் போட்டு, இந்தியாவிற்கு அதிக சீனர்கள் சுற்றுலா புரிவதை ஊக்கப்படுத்துகிறார்கள் இந்த சுற்றுலா பிரியர்கள்.