இந்தியா - ஜெர்மனி இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து - விரைவில் புதிய இந்தியா : மோடி
Modi - Merkel : கல்வி, மருத்துவம், விண்வெளி, விமான போக்குவரத்து துறை, கடற்சார் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படும் பொருட்டு இந்தியா - ஜெர்மனி நாடுகளிடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன
கல்வி, மருத்துவம், விண்வெளி, விமான போக்குவரத்து துறை, கடற்சார் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படும் பொருட்டு இந்தியா - ஜெர்மனி நாடுகளிடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
Advertisment
ஜெர்மனி சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெல், இந்தியாவிற்கு 2 நாட்கள் அரசுமுறைப்பயணமாக வந்துள்ளார். மெர்கெலுக்கு, ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் ஐதராபாத் ஹவுசில், பிரதமர் மோடி - மெர்கெல் சந்திப்பு நடைபெற்றது.
தலைநகர் டில்லியில், காற்று மாசு அபாயகரமான அளவில் உள்ள நிலையிலும், மெர்கெல் முகமூடி அணியாமலேயே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் புதிய இந்தியா 2022ம் ஆண்டிற்குள் உருவாகும் என்று பிரதமர் மோடி, மெர்கெல் உடனான கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இந்த புதிய இந்தியா, ஜெர்மனி நாட்டைப்போன்று வலுவானதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
தீவிரவாதத்தை வேரறுப்பதில் இருநாடுகளும் இணைந்து பணியாற்ற உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள இந்தியா - ஜெர்மனி நாடுகள் இணைந்து செயல்பட உள்ளது.
தமிழகம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆயுத தளவாட தொழிற்சாலைகளில், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் ஜெர்மனியின் பங்கும் இருக்கும். அதுமட்டுமல்லாது, இ-மொபிலிட்டி, ஸ்மார்ட் சிட்டி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்பட உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.