பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இன்று வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூர் புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU) கையெழுத்தாகின.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செமிகண்டக்டர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மோடி தனது X பக்கத்தில், டிஜிட்டல் மயமாக்கல்,மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு (AI), சுகாதாரம், நிலைத்தன்மை மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் திறன் வளர்ப்பதில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஒரு அடையாளமாக மாறியுள்ளது என்று
கூறினார்.
புருனே பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை மதியம் சிங்கப்பூர் வந்த மோடி, உணவு அருந்திய பின் பிரதமர் வோங்கைச் சந்தித்தார்.
அன்றைய தினம், பிரதமர் மோடி ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம், மூத்த அமைச்சர் லீ சியென் லூங் மற்றும் எமரிட்டஸ் மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோரையும் சந்திக்கிறார்.
தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின், பிரதமர் மோடி, லாரன்ஸ் வோங்குடன் இணைந்து செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் சிங்கப்பூரில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிட்டு தொழில்துறையில் ஒத்துழைப்பதற்கான வழிகள் குறித்து விவாதித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: From chips to digital tech and health, India and Singapore sign 4 MoUs as Modi meets Singapore PM
இரு தலைவர்களும் ஏ.இ.எம் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சென்று, உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியில் நிறுவனத்தின் பங்கு, அதன் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவிற்கான திட்டங்கள் குறித்து கேட்டகப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“