Advertisment

லண்டன் காலிஸ்தான் ஆதரவு போராட்டம்; இங்கிலாந்திடம் சந்தேக நபர்களின் விவரங்களைக் கேட்ட இந்தியா

மார்ச் மாதம் காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தின் போது லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான ஆதாரங்களை இங்கிலாந்திடம் கேட்ட இந்தியா; சான்பிராசிஸ்கோ சம்பவம் தொடர்பாகவும் என்.ஐ.ஏ விசாரணை

author-image
WebDesk
New Update
Jai Shankar and Cameron

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் கேமரூன் (பி.டி.ஐ)

Mahender Singh Manral 

Advertisment

மார்ச் 19 அன்று காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தின் போது லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான ஆதாரங்களை இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகளிடம் இந்தியா கோரியுள்ளது. பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் (MLAT) கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது, சந்தேக நபர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் குறிப்பிட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: India asks UK for details on suspects, aides involved in violence at London Mission

அடுத்தப்படியாக, ஜூலை 2 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை குறிவைத்தவர்கள் குறித்த விவரங்களை அமெரிக்காவிடம் இருந்து கேட்டு, NIA ஒரு தனி முன்மொழிவைத் தயாரித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வட்டாரங்கள் கூறியதாவது: இங்கிலாந்து சென்று பல ஆதாரங்களை சேகரித்த பிறகு, மார்ச் 19 வன்முறை பற்றி NIA க்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. "வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற, MLAT இன் கீழ் 24 வினவல்கள் அனுப்பப்பட்டுள்ளன, அதில் போராட்டம், போராட்ட அமைப்பாளர்கள், அவர்களின் சான்றுகள், அவர்களின் அனுமதி பற்றி கேட்கப்பட்டுள்ளது" என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

MLAT இன் கீழ், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியங்களைச் சேகரிக்க எந்த நாடும் மற்ற நாடுகளை அணுகலாம்.

ஏப்ரலில், லண்டன் போராட்டங்கள் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யுமாறு NIA க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது, ஆரம்பகட்ட விசாரணையில் பாகிஸ்தானின் ISI சம்பந்தப்பட்ட பயங்கரவாத தொடர்பு சுட்டிக் காட்டப்பட்டது. உபா சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த டெல்லி காவல்துறைக்கு விசாரணையை என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

மே மாதம், என்.ஐ.ஏ குழு இங்கிலாந்து சென்று சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை சேகரித்தது. இந்தியா திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, என்.ஐ.ஏ வன்முறையின் ஐந்து வீடியோக்களை வெளியிட்டது, தூதரகத்தை சேதப்படுத்த முயன்ற சந்தேக நபர்களை அடையாளம் காண உதவுமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்டது. பதிலுக்கு ஏஜென்சிக்கு 1,050 க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தேக நபர்களை அடையாளம் காண NIA விசாரணைக் குழுவிற்கு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவும் (R&AW) உதவியதாக மற்றொரு அதிகாரி தெரிவித்தார். "என்.ஐ.ஏ தாக்குதல் நடத்திய 15 நபர்களை அடையாளம் கண்டுள்ளது, அவர்களில் சிலருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டது," என்று ஒரு அதிகாரி கூறினார்.

எஃப்.ஐ.ஆரில், புகார்தாரரும் தூதரகத்தின் உதவி பணியாளர் மற்றும் நல அலுவலருமான கிரண் குமார் வசந்த் போசலே, அவதார் சிங் என்ற கந்தா, குர்சரண் சிங் மற்றும் ஜஸ்விர் சிங் ஆகிய மூன்று நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். "கந்தா ஜூன் மாதம் பர்மிங்காமில் இறந்தார்," என்று ஒரு அதிகாரி கூறினார்.

வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அசாமின் திப்ருகார் சிறையில் உள்ள அவரது கூட்டாளிகள் ஒன்பது பேர் கந்தாவுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து சம்பவம் தொடர்பாக NIA விசாரணை நடத்தியது.

இதற்கிடையில், சான்பிரான்சிஸ்கோவில் நடந்த போராட்டம் தொடர்பாக, என்.ஐ.ஏ குழு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்றது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தாக்குதல் நடத்திய சிலரை நாங்கள் அடையாளம் கண்டு, அவர்களில் சிலருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளோம். MLATக்கான வினவல்களை நாங்கள் தயார் செய்து வருகிறோம்,” என்று ஒரு அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India England
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment