டிக்-டாக் தடை பற்றி சீனா கருத்து: ‘இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது’

இந்தியா டிக்டாக், யூசி பிரவுசர், விசேட் உள்பட 59 சீன செயலிகளை தடை செய்துள்ளது குறித்து சீனா கடும் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், பெய்ஜிங் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலியுறுத்தியதுடன், இந்தத் தடை இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

By: June 30, 2020, 5:51:48 PM

இந்தியா டிக்டாக், யூசி பிரவுசர், விசேட் உள்பட 59 சீன செயலிகளை தடை செய்துள்ளது குறித்து சீனா கடும் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், பெய்ஜிங் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலியுறுத்தியதுடன், இந்தத் தடை இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தடை செய்யப்பட்ட 59 செயலிகளின் சீன தொடர்புகளை சுட்டிக்காட்டவில்லை.

கிழக்கு லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடைபெற்ற வன்முறை மோதலுக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா சீன செயலிகளை தடை செய்வதை விரைவாக்கினார். இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதட்டத்தைத் தூண்டியது.

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 59 செயலிகள் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பவை என்று கூறியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான இந்திய மொபைல் மற்றும் இணைய பயனர்களின் நலன்களைப் பாதுகாக்கும் என்று திங்கள்கிழமை இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இந்திய தரப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து சீனா கடுமையாக கவலை கொண்டுள்ளது. நாங்கள் நிலைமையை பரிசோதித்து சரிபார்த்துவருகிறோம்.” என்று ஜாவோ லிஜியன் செவ்வாய்கிழமை வழக்கமாக நடைபெறும் அமைச்சக மாநாட்டில் கூறினார்.

மேலும், ஜாவோ லிஜியன் கூறுகையில், “சீன அரசாங்கம் எப்போதும் சீன வணிகங்களை வெளிநாடுகளுடனான அவர்களின் வணிக ஒத்துழைப்பு விதிமுறைகளில் சர்வதேச விதிகள், உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுமாறு கேட்டுக்கொள்கிறது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.

ஜாவோ வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து அதன் பொறுப்புகளை புது டெல்லிக்கு ஞாபகப்படுத்தச் சென்றார்.

“சீனர்கள் உட்பட சர்வதேச முதலீட்டாளர்களின் நியாயமான மற்றும் சட்ட உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு உண்மையில் பரஸ்பர நன்மை பயக்கும் வெற்றி-வெற்றி.” என்று ஜவோ லிஜியன் அவர் கூறினார்.

ஜாவோ மேலும் கூறுகையில், “இத்தகைய முறை செயற்கையாக குறைத்து மதிப்பிடுவற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அது இந்திய தரப்பின் நலனுக்காக அல்ல” என்று கூறினார்.

பிரபல சீன சமூக ஊடக செயலியான விசேட் சில நாட்களுக்குப் பிறகு சீன செயலிகளை தடை செய்ய புதுடெல்லி முடிவு செய்துள்ளது. இந்த செயலி இந்தியாவால் தடை செய்யப்பட்டுள்ளது.

20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட மோதலில் பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கை உட்பட தற்போதைய எல்லை மோதல் வரை இந்திய தூதரகம் (ஈஓஐ) தனது அப்டேட்களை நீக்கியது.

அதன் பதிவுகளை நீக்குவதற்கான காரணங்களாக மாநில ரகசியங்களை வெளிப்படுத்துவது மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்று தெரிவித்துள்ளது.

விசேட் செயலியில் வெளியிடப்பட்ட பதிவுகளில் இந்தியா-சீனா எல்லை நிலைமை குறித்த மோடியின் கருத்துக்கள், இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்திய – சீன வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான தொலைபேசி அழைப்பு மற்றும் எல்லை நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சின் (எம்இஏ) செய்தித் தொடர்பாளர் அளித்த அறிக்கை ஆகியவை அடங்கும்.

சீனாவுடன் தொடர்புள்ள செயலிகளை தடைசெய்வதற்கும், இந்திய செயலிகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதற்கும் இந்தியாவின் முடிவு அதன் அண்டை நாடுகளின் தயாரிப்புகளை நம்புவதைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியாகும் இது. மேலும், சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் எல்லைகளை சீனாவுக்கு அப்பால் விரிவாக்கும் முயற்சிகளைத் தடுக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:India bans tiktok uc browser 59 chinese apps chinese response to india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X