ஐநா மனித உரிமைகள் ஆணையம் (UNHRC) நேற்று உறுப்பு நாடுகளை தேர்ந்தெடுக்க நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவிற்கு ஆதரவாக 188 வாக்குகள் கிடைத்துள்ளன . ஆசியா - பசிபிக் பிராந்தியத்திற்கான அமைப்பில் உறுப்பினராவதிற்காக நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 97 வாக்குகள் எடுத்தால் உறுப்பினர்கள் ஆகலாம் என்ற நிலையில் , இந்தியாவிற்கு ஆதரவாக 188 வாக்குகள் கிடைத்திருக்கிறது.
இதனை குறிப்பிட்டு பேசிய ஐநாவிற்கான இந்திய தூதர் “ ஏனைய நாடுகளைக் காட்டிலும் இந்தியா அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து உறுப்ப்பினர்களுக்கும் நன்றி” என்று கூறியிருக்கிறார்.
இந்த அமைப்பில் உறுப்பினராவது மூலம் வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் ஒரு அங்கமாக இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐநா மனித உரிமைகள் ஆணையம் - சுஷ்மா ஸ்வராஜ் வாழ்த்துகள்
ஐநா அமைப்பில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். 193 நாடுகள் அடங்கிய சபையில் இந்தியாவிற்கு ஆதரவாய் 188 நாடுகள் வாக்களித்துள்ளன என குறிப்பிட்டிருக்கிறார்.