ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா உறுப்பு நாடாக இணைந்தது
193 நாடுகள் அடங்கிய சபையில் இந்தியாவிற்கு ஆதரவாய் 188 நாடுகள் வாக்களித்துள்ளன என வெளியுறவுத் துறை அமைச்சர் மகிழ்ச்சி
ஐநா மனித உரிமைகள் ஆணையம் (UNHRC) நேற்று உறுப்பு நாடுகளை தேர்ந்தெடுக்க நடத்திய வாக்கெடுப்பில் இந்தியாவிற்கு ஆதரவாக 188 வாக்குகள் கிடைத்துள்ளன . ஆசியா – பசிபிக் பிராந்தியத்திற்கான அமைப்பில் உறுப்பினராவதிற்காக நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 97 வாக்குகள் எடுத்தால் உறுப்பினர்கள் ஆகலாம் என்ற நிலையில் , இந்தியாவிற்கு ஆதரவாக 188 வாக்குகள் கிடைத்திருக்கிறது.
இதனை குறிப்பிட்டு பேசிய ஐநாவிற்கான இந்திய தூதர் “ ஏனைய நாடுகளைக் காட்டிலும் இந்தியா அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து உறுப்ப்பினர்களுக்கும் நன்றி” என்று கூறியிருக்கிறார்.
இந்த அமைப்பில் உறுப்பினராவது மூலம் வருகின்ற ஜனவரி 1ம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் ஒரு அங்கமாக இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐநா மனித உரிமைகள் ஆணையம் – சுஷ்மா ஸ்வராஜ் வாழ்த்துகள்
ஐநா அமைப்பில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். 193 நாடுகள் அடங்கிய சபையில் இந்தியாவிற்கு ஆதரவாய் 188 நாடுகள் வாக்களித்துள்ளன என குறிப்பிட்டிருக்கிறார்.
I am happy to inform that India has been elected to the United Nations Human Rights Council with highest number of votes. We have secured 188 votes out of 193.
— Sushma Swaraj (@SushmaSwaraj) 13 October 2018
Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.