/indian-express-tamil/media/media_files/gY6xmGBEHmaxIc6eJL5l.jpg)
INDIA bloc meet
திமுக தலைவர் டி.ஆர்.பாலு, செவ்வாய்கிழமையன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் மூன்று மணி நேரக் கூட்டத்தில் இந்தியில் ஆற்றிய உரையின் மொழிபெயர்ப்பைக் கேட்டதால் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார் நிதானம் இழந்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் நிதிஷ்குமார் பேசும்போது உடனிருந்தனர். நிதிஷ் சொல்வதை புரிந்து கொள்ள முடியாமல், டி.ஆர்.பாலு, மறுபுறம் அமர்ந்திருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள ராஜ்யசபா எம்.பி., மனோஜ் கே.ஜாவிடம், பேச்சை மொழிபெயர்க்க முடியுமா என்று சைகை காட்டினார்.
நிதீஷ் குமாரிடம் மனோஜ் ஜா அனுமதி கேட்டபோது, "நாம்நமது நாட்டை இந்துஸ்தான் என்றும், இந்தி நமது தேசிய மொழி என்றும் அழைக்கிறோம். நமக்கு அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும்" என்று கூறி கொந்தளித்தார்.
அப்போது மனோஜ் ஜா தனது பேச்சை மொழிபெயர்க்க வேண்டாம் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார்.
வரவிருக்கும் 2024மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் பிரச்சார உத்திகள் போன்ற விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பதற்காக டெல்லியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நான்காவது கூட்டத்திற்கு இந்தியாகூட்டணிக் கட்சிகள் கூடியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.