Advertisment

சமமான அரசியல் களம் முதல் கெஜ்ரிவால், சோரன் விடுதலை வரை: தேர்தல் ஆணையத்துக்கு இந்தியா கூட்டணி 5 கோரிக்கைகள்

என்.சி.பி தலைவர் சரத் பவார், சிவசேனா (யு.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பி.டி.பி தலைவர் மெகபூபா முப்தி உட்பட பலர் இந்தியா கூட்டணி பேரணியில் கலந்து கொண்டனர்.

author-image
WebDesk
New Update
A PP

புதுடெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணியின் லோக்தந்த்ர் பச்சாவோ பேரணி ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணியின் லோக்தந்த்ரா பச்சாவ் பேரணி. (Express Photo by Abhinav Saha)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய மாபெரும் பேரணியில் இந்த கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. என்.சி.பி தலைவர் சரத் பவார், சிவசேனா (யு.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பி.டி.பி தலைவர் மெகபூபா முப்தி உட்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: From level-playing ground to release of Kejriwal, Soren: INDIA bloc’s 5 demands to EC

ஆளும் பா.ஜ.க-வால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜனநாயக விரோதத் தடைகளை எதிர்கொண்டாலும் முக்கிய எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலின் போது நியாயமான தேர்தல் நடைமுறைக்கு உத்தரவாதம் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியது.

அதன் ஐந்து கோரிக்கைகளில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதும் இடம்பெற்றுள்ளது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற லோக்தந்த்ரா பச்சாவோ பேரணியில் மற்ற கோரிக்கைகளை பட்டியலிட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, தேர்தலை பாதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மீது அமலாக்க இயக்குனரகம், சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறையின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தினார்.

தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் நிதியை வலுக்கட்டாயமாக முடக்கும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி வத்ரா கூறினார். இந்த பேரணியில் இந்தியா கூட்டணியின் கோரிக்கைகளைப் பிரியங்கா காந்தி வத்ரா வாசித்தார்.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் பா.ஜ.க-வின் பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அமைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி கூட்டணி கோரியது.

இந்தியா கூட்டணியின் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில், “லோக்சபா தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் சமமான களத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும், தேர்தல் ஆணையம், இ.டி., சி.பி.ஐ, மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்த வேண்டும், இது தவறான விளையாட்டைக் குறிக்கிறது, ஹேமந்த் சோரன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை நிதி ரீதியாக நெரிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் வடிவில் பா.ஜ.க-வின் பணமோசடி மற்றும் மிரட்டி பணம் பறிப்பதைக் கண்டறிய உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) அமைக்கப்பட வேண்டும்” என்று பிரியங்கா காந்தி கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் (என்.சி.பி.) சரத் பவார் (சரத்சந்திர பவார்), சிவசேனா (யு.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ பொது செயலாளர் டி. ராஜா, பி.டி.பி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு தலைவர் பரூக் அப்துல்லா, மற்றும் ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடிய பிரியங்கா காந்தி வத்ரா, அதிகாரம் நிரந்தரமானது அல்ல, ஆணவம் உடைந்து போகும் என்பதே ராமரின் வாழ்க்கையின் செய்தி என்று அவரிடம் கூற விரும்புவதாகவும் கூறினார்.

“நான் குழந்தையாக இருந்தபோது, நான் என் பாட்டி இந்திராஜியுடன் (இங்கே) வருவேன், அவர் எனக்கு ராமாயணத்தை விவரித்தார். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை ராம பக்தர் என்று அழைத்துக் கொள்கிறார்கள். நான் இங்கே அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். 1,000 ஆண்டுகள் பழமையான கதையையும் அதன் செய்தியையும் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். “ராமர் உண்மைக்காகப் போராடியபோது, அவரிடம் சக்தியோ, வளமோ, தேரோகூட இல்லை. ராவணனிடம் ரதங்கள், வளங்கள், ராணுவம் மற்றும் தங்கம் இருந்தது. ஆனால், ராமரிடம் உண்மை, நம்பிக்கை, சத்தியம், அன்பு, இரக்கம், அடக்கம், பொறுமை, தைரியம் மற்றும் உண்மை இருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களிடமும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் நான் சொல்ல விரும்புகிறேன், ராமரின் வாழ்க்கையின் செய்தி என்னவென்றால், அதிகாரம் நிரந்தரமானது அல்ல... ஆணவம் சிதைந்துவிடும்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Priyanka Gandhi INDIA bloc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment