இந்தியா கூட்டணியின் போபால் பேரணி ரத்து; சனாதன சர்ச்சையில் மக்கள் கோபத்தின் விளைவு – ம.பி முதல்வர்

போபாலில் இந்தியா கூட்டணியின் அக்டோபர் பேரணி ரத்து என காங்கிரஸின் கமல் நாத் அறிவிப்பு; சனாதன தர்மத்தின் கருத்துக்களில் 'பொது மக்கள் கோபத்தின்' விளைவு என மத்திய பிரதேச முதல்வர் தாக்கு

போபாலில் இந்தியா கூட்டணியின் அக்டோபர் பேரணி ரத்து என காங்கிரஸின் கமல் நாத் அறிவிப்பு; சனாதன தர்மத்தின் கருத்துக்களில் 'பொது மக்கள் கோபத்தின்' விளைவு என மத்திய பிரதேச முதல்வர் தாக்கு

author-image
WebDesk
New Update
kamal nath and shivraj

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் (இடது) மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (வலது). (கோப்பு படம்/முகநூல்)

PTI

அக்டோபர் மாதம் போபாலில் நடைபெறவிருந்த எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது என மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சனிக்கிழமை கூறினார். சனாதன தர்மத்திற்கு எதிராக தி.மு.க தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் மீதான “பொதுமக்களின் கோபம்காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

Advertisment

இந்த வார தொடக்கத்தில், பாரதிய ஜனதாவை எதிர்க்கும் காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகளை உள்ளடக்கிய ’இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி’, போபாலில் பேரணியை நடத்துவதாக கூறியிருந்தது.

ஆங்கிலத்தில் படிக்க: INDIA bloc’s Oct rally in Bhopal cancelled, says Cong’s Nath; MP CM cites ‘public anger’ on Sanatan Dharma remarks

ஆனால், “பேரணி நடக்காது. பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளதுஎன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பொதுக்கூட்டம் குறித்து கேட்டபோது கமல் நாத் கூறினார்.

Advertisment
Advertisements

ஒரு கேள்விக்கு பதிலளித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, போபாலில் நடைபெறும் இந்திய கூட்டணி பேரணி குறித்து கட்சித் தலைவர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறினார்.

"ஒரு முடிவு எடுக்கப்பட்டவுடன் நாங்கள் உறுதிப்படுத்துவோம்," என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறினார்.

இந்த வார தொடக்கத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அக்டோபர் முதல் வாரத்தில் போபாலில் முதல் கூட்டு பேரணியை நடத்த முடிவு செய்திருந்தது.

சரத் பவாரின் இல்லத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், பா.ஜ.க அரசின் கீழ் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஊழல் குறித்து பேரணி கவனம் செலுத்தும் என்று கூறினார்.

இந்தியா கூட்டணியின் பேரணி ரத்து செய்யப்பட்டது குறித்த கமல் நாத்தின் அறிக்கைக்கு பதிலளித்த மத்திய முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களில் "பொதுமக்களின் கோபத்துடன்" அதை இணைத்தார்.

இது பொதுமக்களின் கோபம். சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா என்று சொல்வீர்கள். சனாதன தர்மத்தை அவமதிப்பதை மத்தியப் பிரதேச மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்,” என்று கூறிய முதல்வர், இந்த கருத்துக்கள் எங்கள் நம்பிக்கையைதாக்கியுள்ளதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும் என்று கூறினார்.

மத்தியப் பிரதேச மக்களிடையே (சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களால்) கோபமும் வருத்தமும் உள்ளது. மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள் என்று அவர்கள் (எதிர்க்கட்சியினர்) பயந்தனர், எனவே, அவர்கள் இந்தியா கூட்டணியின் பேரணியை ரத்து செய்தனர்,” என்று சிவராஜ் சிங் சௌஹான் கூறினார்.

சமீபத்தில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களான உதயநிதி ஸ்டாலினும், ஆ.ராசாவும், சனாதன தர்மம் சமூகத்தில் பிளவுகளை விதைத்துள்ளது என்றும், டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற நோய்களை ஒழிப்பது போல் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Bjp India Congress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: