Advertisment

நேபாளத்தில் 40 பயணிகளுடன் இந்தியப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்

India Bus Accident in Nepal: நேபாளத்தில் உத்திரப் பிரதேச மாநிலம் பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

author-image
WebDesk
New Update
bus falls

நேபாள பேருந்து விபத்து பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். (Source: my republica)

India Gorakhpur Bus accident in Nepal: நேபாளத்தில் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியப் பேருந்து வெள்ளிக்கிழமை மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 10 பயணிகள் உயிரிழந்ததாக அங்கிருந்து வெளியாகும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன என பி.டி.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: At least 10 killed as Indian bus plunges into river in Nepal

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த பேருந்தில் குறைந்தது 40 பயணிகள் இருந்ததாகவும், காலை 11.30 மணியளவில் அந்த பேருந்து ஆற்றில் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“UP FT 7623” என்ற பதிவு எண் கொண்ட பேருந்து ஆற்றில் விழுந்து ஆற்றின் கரையில் கிடக்கிறது” என்று மாவட்ட காவல்துறை அலுவலகமான தனாஹுன் டி.எஸ்.பி தீப்குமார் ராயா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

உத்தரபிரதேச நிவாரண ஆணையர் கூறுகையில், விபத்தில் சிக்கிய தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த நபர் யாரேனும் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகராஜ்கஞ்ச் துணை-பிரிவு மாஜிஸ்திரேட் நேபாளத்திற்கு அனுப்பப்படுகிறார். அதே நேரத்தில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் மீட்பு முயற்சிகளை ஒருங்கிணைப்பார் என்று தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு வந்த மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) மாதவ் பாடேல் தலைமையிலான 45 ஆயுத போலீஸ் படை வீரர்கள் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nepal India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment