scorecardresearch

பாட்டில் வாட்டர் பயன்படுத்துகிறீர்களா? வீட்டில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் உள்ளன? புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்விகள்

கோவிட் தொற்றுநோய் காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது, மேலும் கணக்கெடுப்புக்கான புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

India Census 2023
India Census 2023

உங்கள் வீட்டில் குடிநீரின் முக்கிய ஆதாரம் எது? பேக்கேஜ் அல்லது பாட்டில் வாட்டர்? உங்கள் சமையலறையில் எல்பிஜி அல்லது பிஎன்ஜி இணைப்பு உள்ளதா? வீட்டில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் அல்லது DTH இணைப்புகள் உள்ளன? உங்கள் குடும்பத்தினர் உட்கொள்ளும் முக்கிய தானியம் எது?

தாமதமான 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு மீண்டும் தொடங்கும் போது, ​​ ​​எந்த மாதிரியான தரவுகள் சேகரிக்கப்படும் என்பது குறித்த சில புதிய கேள்விகள் இவை.

கோவிட் தொற்றுநோய் காரணமாக 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது, மேலும் கணக்கெடுப்புக்கான புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

150 ஆண்டுகள் வரலாறு கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் திங்கட்கிழமை, இறுதியாக அதன் சொந்த புதிய கட்டிடத்தைப் பெற்றது. ஜனகன பவன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த  புதிய அலுவலகத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம், அதன் 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த வார தொடக்கத்தில், ‘1981 ஆம் ஆண்டு முதல் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த ஒரு ஆய்வு’ எனும் ஒரு புதிய பப்ளிகேஷனை வெளியிட்டது.

கடந்த நான்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகள் பற்றிய விரிவான தகவல்கள் இந்த வெளியீட்டில் உள்ளன. 2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான தயாரிப்புகள், முதல் முறையாக சேகரிக்கப்பட வேண்டிய தகவல்கள் உட்பட ஒரு அத்தியாயமும் இதில் உள்ளது.

“இயற்கை பேரழிவுகள்” குடும்பத்தில் இடம்பெயர்வதற்கு ஒரு காரணமா என்பதும் மற்ற புதிய அறிமுகங்களில் ஒன்று ஆகும்.

மதம் பற்றிய கேள்விக்கு இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தம் மற்றும் ஜெயின் ஆகிய ஆறு விருப்பங்கள் உள்ளன. மற்ற மதங்களுக்கு, மதத்தின் பெயரை முழுமையாக எழுதுங்கள், ஆனால் எந்த குறியீட்டு எண்ணையும் கொடுக்க வேண்டாம், என்று வெளியீடு கூறுகிறது.

ஏனெனில் பழங்குடியினர் சர்னாவை (Sarna) தனி மதமாகப் பட்டியலிட கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் பகுதியான வீடு பட்டியலிதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்படும், அந்தவகையில், ஏப்ரல் 1, 2020 அன்று தொடங்கவிருந்த இந்த பயிற்சி, கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது.

மார்ச் 2020 இல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் வெளிவரத் தொடங்கின, மேலும் அந்த ஆண்டு மார்ச் 24 அன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது, இதனால் மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு டிஜிட்டல் பயிற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும் பின்னர் தரவுகளை சேகரிக்க மின்னணு வழிமுறைகள் மற்றும் எப்போதும் போல பாரம்பரிய காகித வடிவங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.    

இந்த வெளியீட்டில், இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் மிருதுஞ்சய் குமார் நாராயண் கூறுகையில், சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டு நிறைவடையும் தருணத்தில், இந்தியாவில் 150 ஆண்டுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடப்பது உணரப்பட்டது. மோனோகிராஃப்கள் வெளியிடப்பட்டதிலிருந்து, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புகளில் இதே போன்ற ஒரு தொகுப்பை வெளியிட இது ஒரு சரியான நேரம் ஆகும் என்று, குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: India census 2023 india population 2023 new census questions

Best of Express