இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம், கிழக்கு லடாக் எல்லைக் கோட்டு பகுதியில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிந்ததாக நம்பப்படுகிறது.
நேற்று, அதிகாலை தொடங்கவதாக திட்டமிடப்பட்ட இந்த கூட்டம், காலை 11 மணிக்குப் பிறகுதான் தொடங்கியது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக லெப்டினென்ட் ஜெனரல் சிங், இந்திய ராணுவ தலைமை தளபதி, ஜெனரல் எம்.எம் நரவனே-வுக்கு விளக்கமளிப்பார். நேற்று, இரவு வரை, இராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திலிருந்து பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை .
முன்னதாக, இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழ்நிலைக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியா, சீனா அதிகாரிகள் ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியில் உருவாக்கப்பட்ட வழிகள் மூலமாக, தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த நிலையில், இந்த ஈடுபாடுகள் குறித்து யூகமாகவோ, ஆதாரமற்றத் தகவல்களையோ வெளியிடுவது உதவிகரமாக இருக்காது. எனவே, ஊடகங்கள் இத்தகைய செய்திகளை வெளியிடுவதிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன" என்ற செய்தியை பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
நடந்து முடிந்த சந்திப்பு குறித்து பெய்ஜிங்கிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சகம், " எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழ்நிலை நிலையானதாக உள்ளது என்றும் , கட்டுப்படுத்தக்கூடிய அளவில் உள்ளது" என்றும்தெரிவித்தது.
சனிக்கிழமை பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு முன்னதாக, இந்திய மற்றும் சீன தூதர்கள் தங்கள் எல்லை பணி செயல்பாடுகள் குறித்து காணொளி மூலம் உரையாடினர். இரு தரப்பினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை அமைதியான கலந்துரையாடலின் மூலம் கையாள வேண்டும் என்றும் அவர்கள் அதை மோதல்களாக மாற்ற அனுமதிக்கக்கூடாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
சனிக்கிழமை நடைபெறும் லெப்டினென்ட் ஜெனரல்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை, ஒருவகையான முயற்சி என்று சுட்டிக் காட்டிய அதிகாரிகள், எந்தவொரு உடனடி தீர்மானத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராக எச்சரிக்கை தெரிவித்தனர்.
இதுவரை, ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில், சீனாவின் ஊடுருவல்கள் முக்கிய பிரச்சனையாக எழுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், இரண்டு பிரிவும் "தலைமை வழங்கிய வழிகாட்டுதலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்ற தெளிவான அறிகுறிகளை புது தில்லியும், பெய்ஜிங்ம் காட்டியது. இந்த தலைமை வழிகாட்டுதல்கள், 2018 வுஹான் முறை சாரா உச்சி மாநாட்டில் நரேந்திர மோதியும் ஷி ஜிங்-பிங்கும் வெளிபடுத்திய 'மூலோபாய வழிகாட்டுதல்களை குறிப்பதாக உள்ளது. இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலமாக ,எல்லைக் கோட்டு பகுதியில் பழைய நிலையை மீட்டெடுப்பதை (status quo ante ) இந்தியா மையமாகக் கொண்டுள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் மேற்கொள்ளும் ரோந்து பணிகளின் வரம்புகள் குறித்த பிரச்சினையை எழுப்பவும், மறுசீரமைப்பு செய்யவும் இந்திய தரப்பு திட்டமிட்டுள்ளது. உதாரணாமாக, பாங்கோங் சோ ஏரியின் வடக்கு கரையில் இந்தியாவின் எல்லைக் கோடு ஃபிங்கர் 8 ரோந்து செல்ல இந்தியா ராணுவத்தினரை சீனா அனுமதிப்பதில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.