பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை – பாதுகாப்புத் தலைமைத் தளபதி பிபின் ராவத்

இந்திய - சீன துருப்புகளுக்கு இடையிலான மோதலை தீர்ப்பது தொடர்பான ராஜதந்திர மற்றும் ராணுவப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் ராணுவம்தான் வாய்ப்பாக உள்ளது என்று பாதுகாப்புத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

By: Updated: August 25, 2020, 03:09:00 PM

இந்திய – சீன துருப்புகளுக்கு இடையிலான மோதலை தீர்ப்பது தொடர்பான ராஜதந்திர மற்றும் ராணுவப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் ராணுவம்தான் வாய்ப்பாக உள்ளது என்று பாதுகாப்புத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

லடாக்கில் சரியான கட்டுப்பாட்டு கோட்டில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான ராணுவ மோதலைத் தீர்ப்பது தொடர்பான ராஜதந்திர மற்றும் ராணுவப் பேச்சுவார்த்தைகள் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில், பாதுகாப்புத்துறை தலைவர் ஜெனரல் பிபின் ராவத் இந்தியாவுக்கு ராணுவ நடவடிக்கைதான் வாய்ப்பாக உள்ளது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மட்டுமே ராணுவம் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு மூத்த இராணுவ அதிகாரி சீனர்களின் அத்துமீறல்கள் மற்றும் லடாக்கில் எல்லைப் பிரச்னையை சமாளிக்க ராணுவப் படையின் வாய்ப்பு குறித்து பகிரங்கமாக பேசியது இதுதான் முதல் முறை ஆகும்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதுகாப்புத் தலைமை தளபதி பிபின் ராவத் லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களைக் கையாள்வதற்கான ராணுவ வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ராணுவ மற்றும் ராஜதந்திர மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மட்டுமே அது செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.

பாங்காங் சோ மற்றும் கோக்ரா போஸ்ட் பகுதியில் துருப்புக்களை வெளியேற்றுவது தொடர்பாக உள்ள முட்டுக்கட்டைகளை உடைக்க சீனாவுடன் மற்றொரு சுற்று ராணுவ பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் பிபின் ராவத் அறிக்கை வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், என்.எஸ்.ஏ அஜித் தோவல், ஜெனரல் பிபின் ராவத் மற்றும் முப்படைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இரு தரப்பிலிருந்தும் துருப்புக்களை முன்பு இருந்த இடத்திற்கு திரும்பப் பெறுவதை இந்தியா கோருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்படாததால், இந்தியா சரியான கட்டுப்பாட்டு கோட்டில் நடவடிக்கையை விரிவாக்க தயாராகிவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:India china border lac dispute talks military option on table if lac talks fail gen rawat

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X