Advertisment

எல்லையில் நீடிக்கும் பதட்டம் ; ரஷ்யாவில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சு!

45 ஆண்டுகளுக்கு பிறகு எல்.ஏ.சியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் பதட்டமான சூழல் மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றது

author-image
WebDesk
New Update
எல்லையில் நீடிக்கும் பதட்டம் ; ரஷ்யாவில் இருநாட்டு  வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சு!

Shubhajit Roy

Advertisment

India-China border row:  இரண்டரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் எல்.ஏ.சி.யின் பதட்ட நிலை நீக்கம் தொடர்பாக 5 முக்கியமான அம்சங்களைக் கொண்ட உடன்படுக்கையை கையெழுத்திட்டனர்.

வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, இரு அமைச்சர்களும் இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் முன்னேற்றங்கள் மற்றும் இந்தியா-சீனா உறவுகள் குறித்து “வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான” கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அந்த அறிக்கையின்படி, இந்தியா-சீனா உறவுகளை வளர்ப்பது தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய ஒருமித்த கருத்திலிருந்து இரு தரப்பினரும் வழிகாட்டுதல்களை எடுக்க வேண்டும் என்றும், வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

To read this article in English

தற்போதைய நிலைமை இரு தரப்பினரின் நலனுக்காகவும் இல்லை என்று இரு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். "எனவே இரு தரப்பினரின் எல்லைப் படையினரும் தங்கள் உரையாடலைத் தொடர வேண்டும், விரைவாக எல்லையில் இருந்து விலக வேண்டும், இருதரப்பினரும் சரியான தூரத்தில் விலகி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்" என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

இந்தியா மற்றும் சீன எல்லை மீதாக இருக்கும் உடன்படுக்கை மற்றும் நெறிமுறைகளை இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று இரு த்ரப்பும் ஒப்புக் கொண்டது. மேலும் பதட்டமான சூழலை உருவாக்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டது.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் சிறப்பு பிரதிநிதிகள் மூலம் தொடர்ந்து உரையாடல் மற்றும் தகவல்தொடர்புகளில் ஈடுபட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்த சூழலில், இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான வேலை பொறிமுறைகளை (WMCC) தொடர வேண்டும் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

நிலைமை தளர்த்தப்படுவதால், எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் அமைதியைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் புதிய நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை (Confidence Building Measures ) முடிவுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை இரு தரப்பினரும் விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இரண்டு தரப்பினரும் தற்போது நிலவும் சூழல் குறித்து முழுமையான, ஆழமான கலந்துரையாடலுக்கு பிறகு இரு தரப்பினரும் 5 அம்ச ஒருமித்த கருத்துகளை எட்டியுள்ளோம் என்று கூறியுள்ளது. இந்தியாவின் சீனாவும் மீண்டும் ஒரு ”கிராஸ்ரோட்ஸ்” நிலையை எட்டியுள்ளது. ஆனால் சரியான பாதையில் இவ்வுறவை இரு தரப்பினரும் இட்டுச் சென்றால் எந்த கஷ்டமும் வராது என்று சீன அறிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சர் வங் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியா சீனா எல்லைப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டு நான்கு மாதங்களுக்கு பிறகு மாஸ்கோவில் ஜெய்சங்கர் மற்றும் வாங் யி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒன்றரை மணி நேரம் மதிய உணவு உட்கொண்டனர். இவ்விருந்தினை ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் வைத்தார்.

இந்தியா சீனா மற்றும் ரஷ்யா உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகு ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மூன்று நாட்டு உறவுகளை வலுப்படுத்த தேவையான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் பரஸ்பர புரிந்துணர்வு நட்பு மற்றும் நம்பிக்கையின் உணர்வில் சர்வதேச மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மூன்று நாடுகளின் பொதுவான வளர்ச்சி, ஒத்துழைப்பு, உலகளாவிய வளர்ச்சியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்தும் இந்த மூன்று நாடுகள் உரையாடியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப் போரில் வெற்றியின் 75 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் ஆகியவற்றை முன்னிட்டு ஜூன் 23 அன்று தங்கள் வீடியோ-மாநாட்டை நினைவு கூர்ந்த அந்த அறிக்கையில், “பன்முகத்தன்மைக்கு ஆதரவு” மற்றும் “சர்வதேச சட்டத்தின் கொள்கைகளின் படி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை” செலுத்துதல் குறித்து மீண்டும் ஆதரவு அளிப்பது குறித்தும் இடம் பெற்றிருந்தது.

ஆர்.ஐ.சி. கூட்டத்திற்கு பிறகு, வாங்கை சந்திப்பதற்கு முன்பு ஜெய்சங்கர் வெளியிட்ட ட்வீட்டில், லாவ்ராவ் தலைமையில் நடைபெற்ற ஆர்.ஐ.சி. வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியா இந்த செயல்முறையின் தலைவராக பொறுப்பேற்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். வாரம் ஒரு முறை நடைபெறும் வெளியுறவுத்துறை அமைச்சக் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செய்திதொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா இரு நாட்டு அமைச்சர்களும் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உறுதி செய்தார். தற்போது இருக்கும் சூழலை சரி செய்ய இந்தியா மற்றும் சீனா தொடர்ந்து அரசியல் மற்றும் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார். 45 ஆண்டுகளுக்கு பிறகு எல்.ஏ.சியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் பதட்டமான சூழல் மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

எல்லையில் மே மாதம் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் மூன்று நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். ஜூன் மாதம் 23ம் தேதி இது போன்ற ஒரு சந்திப்பு நடைபெற்றது. அப்போது வீடியோ காலில் பேசினார்கள். ஜெய்சங்கர் வாங்கை நேரில் சந்திப்பது இதுவே முதன்முறை. ஜூன் 17 அன்று, ஜெய்சங்கர் மற்றும் வாங் ஆகியோர் ஜூன் 15 எல்லை மோதல் தொடர்பாக தொலைபேசியில் பேசினர், இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மாஸ்கோவில் நடந்த ஆர்.ஐ.சி கூட்டத்தில், கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கத்தைத் தணிப்பதில் வலுவான விஞ்ஞான மற்றும் தொழில்துறை திறன்களைக் கொண்ட மூன்று நாடுகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என்று அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment