Advertisment

இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை: பாங்காங் த்சோ பகுதியில் பதட்டம் தணிகிறதா?

ஜூன் ஐந்தாம் தேதி இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு,  இருநாட்டு துருப்புகளும் படை விலகல் நடைமுறைப்படுத்தின.

author-image
WebDesk
New Update
இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை: பாங்காங் த்சோ பகுதியில் பதட்டம் தணிகிறதா?

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில் (LAC)  தற்போது நிலவி வரும் சூழலை தணிக்க,  XIV படைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், பிஎல்ஏ ராணுவ  கமாண்டர் மேஜர் ஜெனரல் லியு லின், இடையேயான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான சந்திப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது.

Advertisment

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி தெற்குப் பகுதியில் , சீன எல்லைக்கு உள்பட்ட மோல்டோ என்னுமிடத்தில் நேற்று இந்த சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த மே மாதம், பாங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரையில் இந்தியா- சீனா துருப்புகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு, எல்லைப் பகுதியில் பதட்டமான சூழலுக்கு வழி வகுத்தது.

கடந்த , ஜுலை 14  அன்று  இந்திய எல்லைப் பகுதியான சூஷுலில் பிஎல்ஏவின் கமாண்டர்கள், இந்திய இராணுவத்தினர் இடையேயான நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் முழுமையான படை விலகலை உறுதி செய்ய முடியாமல் போனது.

சர்ச்சைக்குரிய நான்கு எல்லைப் பகுதிகளில், இரண்டில் முழுமையான படை விலகல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், இரண்டு பகுதிகளில் மோதல் போக்கு தொடர்கிறது.

முன்னதாக,  ஜூன் ஐந்தாம் தேதி இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு,  இருநாட்டு துருப்புகளும் படை விலகல் நடைமுறைப்படுத்தின. இருப்பினும், கோக்ரா போஸ்ட்  செக்டார், பாங்காங் த்சோ ஏரியின் வடக்குக் கரை ஆகிய இடங்களில் முழுமையான படைவிலகல் செயல்முறை சிக்கலானதாக  உள்ளது என்று ராணுவ வாட்டரங்கள் தெரிவிக்கின்றன.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

கோக்ரா போஸ்ட் செக்டாரில் பேட்ரோலிங் பாயின்ட் 17 ஏ-ல்,  1 கி.மீ தூர இடைவெளியில், இரு நாடுகளை சேர்ந்த துருப்புகள் நிறுத்தப்பட்டிருபதாக இராணுவத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

பாங்கோங் த்சோ ஏரியில்,சீன துருப்புக்கள் ஃபிங்கர் - 8-ஐத் தாண்டி  மேற்கு நோக்கி  ஃபிங்கர் - 4 வரை ராணுவக் கட்டுமானங்களை  உருவாகியுள்ளன. படைவிலகல் பேச்சுவார்த்தையின் படி, பிஎல்ஏ ராணுவம் ஃபிங்கர் - 4 பகுதியை விட்டு வெளியேறி,  ஃபிங்கர் 5 பகுதிக்கு பின்வாங்க வேண்டும்.  இருப்பினும், ஃபிங்கர் 4 ரிட்ஜ் கோடுகளை தற்போது வரை சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள ரோந்து புள்ளி 15,  கால்வான் பள்ளத்தாக்கின் ரோந்து புள்ளி 14  ஆகிய இடங்களில் முழுமையான படைவிலகல்  மேற்கொள்ளப்பட்டது.  ஜூன், 15 அன்று கல்வாண் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட எல்லை மோதலில்  20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளியன்று, இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங், " பாங்காங் ஏரியின் வடக்குக் கரையைப் பொறுத்த வரையில், சீனாவின் பாரம்பரிய எல்லை உரிமை, உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியோடு (LAC) இணங்குகிறது. சீனா அங்கு பிராந்திய உரிமைகோரலை விரிவுபடுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திதொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா “ எல்லைப் பகுதியில் சில முன்னேற்றங்களை கண்டு வருகிறோம். ஆனால், முழுமையான படை விலகல் என்ற குறிக்கோள் இன்னும் முழுமையாக உறுதிபடுத்தவில்லை” என்று கூறினார்.

முன்னாள் ராணுவத் தலைமை ஜெனரல் வி.பி மாலிக் வெள்ளிக்கிழமை தனது ட்வீட்டரில்,“ இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் தனது அறிக்கையின் மூலம், இராணுவத் தளபதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றந்களும் இடமளிக்க மறுத்து விட்டார்” என்று பதிவு செய்தார்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகே, இரு தரப்பினரும் தங்கள் இராணுவ இருப்பை அதிகரித்துள்ளனர். கூடுதல் துருப்புக்களுடன் பீரங்கி துப்பாக்கிகள், வான் பாதுகாப்பு ரேடார்கள் ஆகியவற்றை சீனா அதிகரித்துள்ளது. இந்தியா விமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக 35,000 துருப்புக்களை குளிர்காலத்தில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது.

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment