இந்தியா – சீனா எல்லை லடாக்கில் பதற்றம்; ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை

லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை ஜெனரல் பிபின் ராவத் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

By: Updated: May 27, 2020, 04:06:36 PM

லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை ஜெனரல் பிபிபி ராவத் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

முன்னதாக, ஜெனரல் ராவத் மற்றும் மூன்று உயர் அதிகாரிகள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து லடாக்கின் கள நிலவரம், ஆயுதப்படைகளை நிலைநிறுத்துதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் மீது தயாராக உள்ள படைகள் குறித்து விளக்கினார்கள்.

கிழக்கு லடாக்கில் உருவாகி வரும் நிலைமை குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் பிரதமருக்கு அறிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் கூட்டம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், ஆயுதப்படைகளில் சீர்திருத்தங்கள் நிகழ்ச்சி நிரலில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் புதன்கிழமை தொடங்கும் ராணுவத் தளபதிகளின் மூன்று நாள் மாநாட்டிற்கு முன்னதாக இந்த கூட்டங்கள் நடந்துள்ளன. இதில் வடக்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஒய் கே ஜோஷி கலந்து கொள்வார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வடக்கு இராணுவ தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன்னர் அவர் XIV கார்ப்ஸ் கமாண்டராக இருந்ததால், அவர் இப்பகுதியை நன்கு அறிந்தவர் ஆவார்.

இந்த மாநாடு முதலில் ஏப்ரல் 13-18 தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இது இப்போது இரண்டு கட்டங்களாக நடைபெறும், முதல் கட்டம் மே 27 முதல் 29 வரையிலும் இரண்டாவது கட்டம் ஜூன் இறுதியிலும் நடைபெறும்.

“இந்திய ராணுவத்தின் உயர் மட்ட தலைமை தற்போதைய வளர்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் நிர்வாக சவால்களை ஆலோசனை செய்யும். மேலும், இந்திய ராணுவத்திற்கான எதிர்கால போக்கை பட்டியலிடும்” என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றங்கள் குறையவில்லை. சீனர்களைப் போல இந்தியாவும் ஆட்களையும் பொருட்களையும் நிறுத்தி வருகிறது.

லடாக்கில் மட்டுமில்லாமல் வடக்கு சிக்கிம், உத்தரக்காண்ட், அருணாச்சல பிரதேசம் ஆகியா சீனாவுடனான எல்லையில் ராணுவம் தனது இருப்பை அதிகரித்துள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சீனாவின் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையைப் பார்த்து இந்தியா தனது நடவடிக்கையை குறைக்காது என்ற புரிதலின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

லடாக்கில், இந்திய – சீன ராணுவத் தளபதிகளிடையே களத்தில் குறைந்தது ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், ஒரு முனேற்றமும் அடையவில்லை. மூன்று இடங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிய சீனர்கள், இந்திய பிரதேசத்திலிருந்து வெளியேறவோ அல்லது பதட்டங்களை அதிகரிக்கவோ மறுத்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் சீனத் துருப்புகள் நிலைகொண்டுள்ளன.

இப்பகுதியில் இந்தியாவின் முக்கிய அதிகாரப்பூர்வ சொத்து என்பது 255 கி.மீ. நீளமுள்ளடார்புக்-ஷியோக் தௌலத் பேக் ஓல்டி (டி.எஸ்.டி.பி.ஓ) சாலையாகும். இது கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இது 2008 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஃப் ஒரு மேம்பட்ட விமானம் தரையிரங்கும் தளத்தை மீண்டும் செயல்படுத்த தௌலத் பெக் ஓல்டிக்கு அனுமதி வழங்குகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து இந்த சாலைக்கு மிக அருகில் கால்வான் பள்ளத்தாக்கு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:India china border tension in ladakh pm modi and defence minister rajnath singh meeting with army chiefs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X