ராகுல் காந்திக்கு எங்கிருந்து ‘ட்ரக்ஸ்’ கிடைக்கிறது: மத்திய பிரதேச அமைச்சர் விமர்சனம்

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சக்தியையும், இந்த தேசத்தைப் பற்றிய முழுமையான புரிதல்களும் பிரதமரிடம் இல்லை

நாங்கள் ஆட்சியில் இருந்தால், சீனப்படைகளை 15 நிமிடங்களுக்குள் விரட்டி அடித்திருப்போம் என்ற ராகுல காந்தியின் கருத்தை மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா விமர்சித்தார்.  மேலும், ” ராகுல் காந்திக்கு எங்கிருந்து இவ்வளவு தரமான ட்ரக்ஸ் கிடைக்கிறது ? (Drugs)” என்றும் நக்கலாய் தெரிவித்தார்.   

செவ்வாய்க்கிழமை மாலை`கிசான் யாத்ரா’ என்ற பயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி ஒரு ‘கோழை’ என்று விமர்சித்தார். மேலும், ” நமது நிலத்திலிருந்து ஒரு அங்குலத்தைக் கூட யாரும் கைப்பற்றவில்லை  என்று இந்த பிரதமர் கூறுகிறார். சீனா, இந்தியாவின் எல்லைப் பகுதிக்குள்  1200 சதுர கி.மீ. நிலப்பரப்பை கையகப்படுத்தியுள்ளது. பிரதமர் தன்னை ஒரு “தேசியவாதி ” என்று மார்தட்டிக் கொள்கிறார். சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை மொத்த நாடும் அறியும். பிரதமர், என்ன வகையான தேசபக்தர்?  நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால், 15 நிமிடங்களுக்குள் சீனப்படைகளை விரட்டி அடித்திருப்போம்.  நாட்டின்  சுயமரியாதையை விட்டுக் கொடுத்திருக்க மாட்டோம் ”என்று காந்தி கூறினார்.

 

 

“இந்திய எல்லைப் பகுதிக்கும் சீனப் படைகள் ஊடுருவி நான்கு மாதங்கள் முடிவடைந்துள்ளன. இன்னும், அவர்கள் வெளியேற்றப்படவில்லை. அவர்களை வெளியேற்ற எவ்வளவு நேரம்,இந்த அரசு எடுத்துக் கொள்ளப் போகிறது? மத்தியில், தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையும் வரை, சீனாவின் தனது அத்துமீறல்களை அதிகரிக்கும் என்று  நான் நினைக்கிறேன். ஆனால், எங்கள் ஆட்சியில் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்,”என்று தெரிவித்தார்.

 

 

 

மோடி சமூகத்தையும்,  தேசத்தையும் பலவீனப்படுத்தியுள்ளார். அதன், விளைவாக, எல்லைப்   பகுதியில் தாய்மண்ணைப் பாதுகாக்கும் பணியில் உள்ள வீரர்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும், “விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சக்தியையும், இந்த தேசத்தைப் பற்றிய முழுமையான புரிதல்கள் பிரதமரிடம் இல்லை . தன்னைபற்றிய பிம்பங்களை நினைத்து அவர் அதிகம் கவலை கொள்கிறார். யாருமற்ற அடல் சுரங்கப்பாதையில் பிரதமர் கையசைக்கும் போட்டோவை நீங்கள் பார்த்திருக்கலாம்” என்றும் தெரிவித்தார்.

 

லடாக் நிலைப்பாடு தொடர்பாக ராகுல் காந்தி பலமுறை அரசாங்கத்தை குறிவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்திய- சீனா எல்லை நிலமைகளை சரியாக கையாளவில்லை என்பது அவரின் முக்கிய குற்றச்சாட்டு.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: India china border tension mp minister narottam mishras jibe at rahul gandhi

Next Story
பீகார் தேர்தல் டிஷ்யூம்: பஸ்வான் கட்சி வேட்பாளர்களாக மாறும் பாஜக தலைவர்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express