/tamil-ie/media/media_files/uploads/2021/06/Ladakh-eastern.jpg)
India China discuss early resolution : கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் மீதமுள்ள பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்து இந்தியாவும் சீனாவும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன.
ஆன்லைனில் நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான (WMCC) 22வது கூட்டத்தில், இரு தரப்பினரும் மூத்த தளபதிகள் கூட்டத்தின் அடுத்த (12 வது) சுற்றை விரைவாக நடத்த ஒப்புக்கொண்டனர். உண்மையான கட்டுபாட்டு எல்லையில் உள்ள முக்கிய புள்ளிகளில் இருந்து ராணுவத்தினரை விலக்கி கொள்வது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும். மார்ச் 12ம் தேதி அன்று கடைசியாக WMCC கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் மேற்குத் துறையில் எல்.ஐ.சி யின் நிலைமை குறித்து இரு தரப்பினரும் “வெளிப்படையான கருத்துக்களை” கொண்டிருந்ததாக வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிழக்கு லடாக்கில் எல்.ஐ.சி உடன் மீதமுள்ள பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
இருநாட்டு உறவுகளில் மேம்பாடு அடைய, அமைதியை மீண்டும் நிலை நிறுத்த, கிழக்கு லடாக்கில் உள்ள அனைத்து புள்ளிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவத்தை வெளியேற்ற தேவையான தீர்வை அதிகாரிகள் மற்றும் ராணுவ வழிமுறைகள் மூலம் நடத்தப்படும் பேச்சுவார்த்தை வழியாக எட்ட இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இடைக்காலத்தில், இரு தரப்பினரும் களத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதோடு, அசம்பாவிதங்களையும் தடுக்கும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தரப்புக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (கிழக்கு ஆசியா) தலைமை வகித்தார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் பெருங்கடல் துறை இயக்குநர் ஜெனரல் சீனக் குழுவுக்கு தலைமை தாங்கினார்.
எல்லைக்கு அருகில் ஏராளமான துருப்புக்களை குவித்த சீனாவின் நடவடிக்கைகள் மற்றும் கிழக்கு லடாக்கில் தொடர்ச்சியான இராணுவ நிலைப்பாட்டிற்காக கடந்த ஆண்டு எல்.ஐ.சி உடன் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற முயற்சித்ததாக இந்தியா வியாழக்கிழமை சீனாவை குற்றம் சாட்டியது. மேலும் இந்த நடவடிக்கைகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறியதாகவும் கூறப்பட்டது.
அத்துமீறல் மற்றும் அச்சுறுத்தல்களை தடுக்க சீனாவில் இராணுவத்தை நிலைநிறுத்துவது ஒரு சாதாரண பாதுகாப்பு ஏற்பாடாகும் என்று சீன கூறியதற்கு அடுத்த நாள் எல்லை தொடர்பாக இத்தகைய அறிவிப்புகளை வெளியிடட்டது இந்தியா.
மேற்குத் துறையில் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் ஏராளமான துருப்புக்களைக் குவிப்பது மற்றும் எல்.ஐ.சி உடன் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற முயற்சிப்பது உட்பட கடந்த ஆண்டு சீன நடவடிக்கைகள்தான் இது என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும், அவை அமைதியைக் கடுமையாக பாதித்துள்ளன என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்கள் உட்பட இருதரப்பு உடன்படிக்கைகளையும் மீறுவதாகும். , இரு தரப்பினரும் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையை கண்டிப்பாக மதிக்க வேண்டும். கடைபிடிக்க வேண்டும். இரு தரப்பினரும் தங்கள் இராணுவப் படைகளை எல்.ஐ.சி. குறைந்தபட்சமாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாக்சி கூறினார்.
புதன்கிழமை அன்று, மேற்கு பகுதியில் ராணுவ வீரர்களை நிறுத்துவது என்பது சாதாரண பாதுகாப்பு உடன்படிக்கை என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவ் லிஜியன் கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு இருந்தது. "சீனா-இந்தியா எல்லையின் மேற்குப் பகுதியில் சீனாவின் இராணுவ வரிசைப்படுத்தல் என்பது ஒரு சாதாரண பாதுகாப்பு ஏற்பாடாகும், இது சம்பந்தப்பட்ட நாட்டினால் சீனாவின் எல்லைக்குள் அத்துமீறல் மற்றும் அச்சுறுத்தலைத் தடுக்கும் மற்றும் பதிலளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று சீன செய்தி தொடர்பாளார் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.